தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாலை வசதி கேட்டு தொடர் போராட்டம்: விவசாய சங்கத்தினர் கைது

12 Jan 2026, 7:20 am
சாலை வசதி கேட்டு தொடர் போராட்டம்: விவசாய சங்கத்தினர் கைது
<p><strong>சாலை வசதி கேட்டு தொடர் போராட்டம்: விவசாய சங்கத்தினர் கைது</strong></p> <p>நாமக்கல், ஜன.12- எருமப்பட்டி அருகே போதிய சாலை &nbsp;வசதி இல்லாததால் தினந்தோறும் ஏரா ளமான பொதுமக்கள் அவதிக்குள் ளாகி வருவதாக கூறி தொடர் காத் திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த &nbsp;தமிழ்நாடு விவசாய சங்கத்தைச் சேர்ந்த &nbsp;50 பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்க லம் அடுத்துள்ள எருமப்பட்டி ஒன்றி யம் பொன்னேரி கைகாட்டி பகுதியில் &nbsp;இருந்து, கோம்பை வரை சாலை அமைத்துக் கொடுக்க வேண்டுமென அப்பகுதி விவசாயப் பிரதிநிதிகள் மற் றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட் டம் நடத்தி வருகின்றனர். அந்த இடம் &nbsp;ஓடை புறம்போக்கு நிலமாக இருப்ப தால், அதில் சாலை அமைக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இந் நிலையில் அதிகாரிகளுடன் விவசாய &nbsp;சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்டு, உடனடியாக பொன்னேரி கைகாட்டி பகுதியில் இருந்து கோம்பை வரை உள்ள &nbsp;ஓடைப்புறம்போக்கு நிலத்தில் தற் காலிக மண் சாலை அமைப்பதற்காக நிலம் அளவிடும் செய்யும் கடந்த மாதத் தில் தொடங்கி நடைபெற்று வந்தது. 90 சதவீத பணிகள் நிறைவு பெற்ற &nbsp;நிலையில் மீதமுள்ள 10% சதவீதம் நிலம் அளவீடு செய்யும் பணிக்கு அப்பகுதி யில் விவசாய நிலத்தின் உரிமையாளர் கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நிலம் அளவீடும் செய்யும் பணி நிறுத்தப் பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் மீண்டும் போராட் டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9 நாட்களுக்கு மேலாக தொடர் காத்திருப்புப் போராட்டம் நடை பெற்று வந்த நிலையில், சனியன்று மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் &nbsp;போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் உடன் பாடு ஏற்படாத நிலையில் ஏ.எஸ்.பி &nbsp;ஆகாஷ் ஜோஷி தலைமையில் தொடர் &nbsp;காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.