விவசாயிகள் சங்க பவானி தாலுகா மாநாடு
26 Dec 2025, 4:32 pm
<p><strong>விவசாயிகள் சங்க பவானி தாலுகா மாநாடு</strong></p>
<p>ஈரோடு, டிச.26- விவசாயிகள் சங்க பவானி தாலுகா மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய் யப்பட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா 10 ஆவது மாநாடு ஆப்பக்கூடல் பகு தியில் வெள்ளியன்று நடைபெற்றது. தாலுகா தலைவர் என்.சின்னசாமி தலைமை வகித்தார். பெத்தாநாயக்கர் கொடியேற்றி னார். மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாரிமுத்து துவக்கவுரையாற்றினார். விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ். மாணிக்கம் வாழ்த்திப் பேசினார். இம்மாநாட் டில், சக்தி சர்க்கரை ஆலையில் எரி சாராய ஆலை கழிவுநீரால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக் கப்பட்ட பகுதிகளில் பாசனத்திற்கும், பயன் பாட்டிற்கும் தேவையான தண்ணீர் வழங்க வேண்டும். உயர்மின் அழுத்த கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தாமத மின்றி இழப்பீடு வழங்க வேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் தாலுகா தலைவராக என்.பாலமுருகன், செயலாள ராக பெரியசாமி, பொருளாளராக கே.ஆர். சண்முகம் உட்பட கமிட்டி உறுப்பினர்களாக 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச் செயலாளர் ஏ.ஏம்.முனுசாமி நிறைவுரையாற் றினார்.</p>
