விவசாயிகள் சங்கத்தினர் பிரச்சார இயக்கம்
31 Jan 2026, 5:27 pm
<p><strong>விவசாயிகள் சங்கத்தினர் பிரச்சார இயக்கம்</strong></p>
<p>ஈரோடு, ஜன.31- ஒன்றிய பாஜக அரசின் வேளாண் விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கை களை அம்பலப்படுத்தி, சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார் பில் பிரச்சாரம் நடைபெற்றது. கடந்த 2014 ஆஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பாஜக, எம்.எஸ்.சாமிநா தன் குழு பரிந்துரைப்படி விளைபொருட்க ளுக்கு கட்டுப்படியான விலை வழங்கு வோம். விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்கும் வகையில் கடன்களை முழுக்க தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதிய ளித்தது. ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிக ளுக்கு விரோதமான சட்டங்களை இயற்றி, கார்ப்பரேட்களுக்கு ஆதரவான கொள்கை களை மேற்கொண்டு வருகிறது. இதனைக் கண்டித்து பிப்.4 ஆம் தேதி திருப்பூரில் பெருந்திரள் தர்ணா போராட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. இப்போராட்டத்தின் நோக்கங் களை விளக்கி ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தினர் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் தாலுகா தலைவர் பி.கணேஷ் தலைமையில், 5 மையங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்டக்குழு உறுப் பினர் கே.எம்.விஜயகுமார், தாலுகா செயலா ளர் பி.வாசுதேவன், நிர்வாகிகள் ஏ.சகாதே வன், செல்லி கவுண்டர், சிஐடியு நிர்வாகிகள் கே.பாண்டியன், குமாரசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
