உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை கண்டித்து அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
18 Jul 2026, 12:08 am
<p><strong>உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை கண்டித்து அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் </strong></p><p>ராணிப்பேட்டை, ஜூலை 17- தோட்டக்கலைத் துறையின் தனித் தன்மையைச் சிதைக்கும் உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் 2.0-ஐ ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக் மற்றும் முனியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தோட்டக்கலைத் துறையின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பாதிக்கும் இத்திட்டத்தால், சிறு மற்றும் குறு விவசாயிகள் பாதிக்கப்படுவதுடன், தடையின்றி வழங்கப்பட்டு வரும் தொழில்நுட்ப சேவைகளும் முடங்கும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டம் அலுவலர்களின் பணி நலனையும் பாதிக்கும் என்பதால், விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு இத்திட்டத்தை உடனடியாக முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என அலுவலர்கள் வலியுறுத்தினர்.</p>
