தென்னை மரத்தில் இருந்து விழுந்து விவசாயி உயிரிழப்பு இழப்பீடு கோரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
19 Jul 2026, 10:54 pm
<p><strong>தென்னை மரத்தில் இருந்து விழுந்து விவசாயி உயிரிழப்பு இழப்பீடு கோரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்</strong></p><p>ராணிப்பேட்டை, ஜூலை 19- சோளிங்கர் வட்டம், தளவாய்பட்டடை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமு (55), சனிக்கிழமை வேலம் பகுதியில் தென்னை மரம் ஏறி சுத்தம் செய்யும் பணியில் ஈடு பட்டிருந்தபோது தவறி விழுந்து உயிரி ழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விவசாயச் சங்கப் பணிகளில் தீவிர மாக ஈடுபட்டு வந்த ராமுவின் மறைவு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது. அவருக்கு மனைவி அமுல் (எ) அண்ணியம்மால், மகள் இளமதி மற்றும் மகன் தினேஷ் ஆகியோர் உள்ளனர். இந்த துயரச் சம்பவம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட குழு கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, ராமுவின் குடும்பத்திற்குத் தமிழக அரசு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எல்.சி. மணி மற்றும் மாவட்ட துணை செயலாளர் ஆர். மோகன்ராஜ் ஆகியோர் நேரில் சென்று ராமுவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மேலும், காவல்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், வாலாஜா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனையை விரைந்து முடித்து உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.</p>
