முந்தய பக்கம்

துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை

1 Jan 2026, 4:14 pm
துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை
<p>துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை உதகை, ஜன.1- கூடலூர் அருகே விவசாயி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு &nbsp;தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள வடவயல் பகு தியை சேர்ந்தவர் குட்டன் (எ) குட்டி கிருஷ்ணன் (48). விவசாயி யான இவருக்கு அஞ்சு (44) என்ற மனைவியும், ஒரு மகன், 2 &nbsp;மகள்கள் உள்ளனர். இதில், ஒரு மகளுக்கு திருமணமாகி தனி யாக வசித்து வருகிறார். மற்ற 2 குழந்தைகள் வெளியூரில் படித்து வருகின்றனர். குட்டி கிருஷ்ணன், மனைவியுடன் தனி யாக வசித்து வந்தார். இந்நிலையில், செவ்வாயன்று இவ ரது மனைவி, அருகிலுள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றி ருந்தார். தொடர்ந்து, புதனன்று உறவினர் ஒருவர், குட்டி கிருஷ்ணணின் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அவர் போனை எடுக்காததால் உறவினர், நேரடியாக வீட்டிற்கு &nbsp;சென்று பார்த்தபோது, வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இத னால் சந்தேகமடைந்த உறவினர், கதவை உடைத்து உள்ளே &nbsp;சென்று பார்த்தபோது, குட்டி கிருஷ்ணன் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குட்டி கிருஷ்ணனின் தந்தை &nbsp;இறந்து 12 நாட்களே ஆகியுள்ள நிலையில், குட்டி கிருஷ்ண னும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram