தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உரிய இழப்பீடு வழங்காமல் நிலத்தை கையகப்படுத்த முயற்சிப்பதைக் கண்டித்து விவசாயி தீக்குளிக்க முயற்சி

11 Dec 2025, 5:47 pm
உரிய இழப்பீடு வழங்காமல் நிலத்தை கையகப்படுத்த முயற்சிப்பதைக் கண்டித்து விவசாயி தீக்குளிக்க முயற்சி
<p><strong>உரிய இழப்பீடு வழங்காமல் நிலத்தை கையகப்படுத்த முயற்சிப்பதைக் கண்டித்து விவசாயி தீக்குளிக்க முயற்சி</strong></p> <p>தருமபுரி, டிச.11- உரிய இழப்பீடு வழங்காமல் நிலத்தை கையகப்படுத்த தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் முயற்சிப் பதாகக்கூறி, பாதிக்கப்பட்ட விவ சாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பாலக் கோட்டை அடுத்த எர்ரனஅள்ளி ஊராட்சி, புங்கன்குட்டை பகுதியைச் &nbsp;சேர்ந்தவர் அழகுவேல் (49). விவ சாயி-யான இவருக்கு சொந்தமான &nbsp;ஒரு ஏக்கர் நிலத்தை அதியமான் - &nbsp;ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலை &nbsp;அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை எடுத்துக்கொண்டது. இவரது &nbsp;நிலத்திலிருந்த கிணறு, பம்பு செட், 4 போர்வெல், 140 தென்னை மரங்கள் உள்ளிட்ட இதர மரங்களுக்கு இழப்பீடு வழங்காமல் வஞ்சித்து வருவதாகவும், அதேபகுதியில் மற் றவர்களுக்கு கிணற்றிற்கு ரூ.80 லட் சம், ரூ.90 லட்சம் என வழங்கியுள்ள தாகவும், இவரது கிணற்றிற்கு ரூ.1.10 &nbsp;லட்சம் மட்டுமே வழங்கியதால், இதனை ஏற்க மறுத்து உரிய இழப்பீடு &nbsp;வழங்கும் வரை நிலத்தை கையகப்ப டுத்த அனுமதிக்க மாட்டேன் என போராடி வந்தார். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதி காரிகள் மாவட்ட துணை காவல் கண் காணிப்பாளர் ஜசுந்தர் தலைமையில் &nbsp;அழகுவேல் நிலத்தை கையகப்ப டுத்த சென்றனர். அப்போது அதிகாரி கள் மற்றும் போலீசாரிடம் நியாயம் &nbsp;கேட்ட அழகுவேலை, ஒரு பொருட் டாகவே மதிக்காமல் ஜேசிபி இயந்தி ரம் மூலம் நிலத்தை கையகப்படுத்த முயன்றனர். இதனால் விரக்திய டைந்த அழகுவேல் உடல் முழு வதும் மண்ணெண்ணெய் ஊற்றி &nbsp;கொண்டு தீக்குளிக்க முயன்றார். துரி தமாக செயல்பட்ட போலீசார் அழகு வேல் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியினை தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு பொதுமக்கள் குவியதொடங்கியதால் அதிகாரி கள் நிலம் கையகப்படுத்தும் முயற் சியை கைவிட்டு திரும்பி சென்றனர். உரிய இழப்பீட்டை வழங்கி விட்டு நிலத்தை எடுத்து கொள்ளுங்கள்; இல்லையென்றால் நிச்சயமாக தற் கொலை செய்து கொள்வேன் என &nbsp;விவசாயி வேதனையுடன் தெரிவித் துள்ளார். மேலும், நில எடுப்பு மாவட்ட வரு வாய் அலுவலராக இருந்த முகுந்தன் &nbsp;என்பவர், ஒரே மாதிரியான நிலங்க ளுக்கு ஒரு சிலருக்கு கோடி கணக்கி லும், ஒரு சிலருக்கு குறைவான &nbsp;தொகையினையும் ஒதுக்கியுள்ள தாக தொடர்ந்து அவர் மீது குற்ற சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள் ளது. இதனை தமிழக அரசு உடனடி யாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.