பயிர் இன்சூரன்ஸ் பதிவு செய்ய கால அவகாசம் வழங்கிடுக! விவசாயிகள் சங்கம் கோரிக்கை
14 Nov 2025, 1:26 pm
<p><strong>பயிர் இன்சூரன்ஸ் பதிவு செய்ய கால அவகாசம் வழங்கிடுக! விவசாயிகள் சங்கம் கோரிக்கை</strong> </p>
<p>இராமநாதபுரம், நவ.14- இராமநாதபுரத்தில் நவம்பர் 15 அன்றுடன் நெல் பயிர் இன்சூரன்ஸ் செய்வதற்கு கால அவகாசம் முடிவ டையும் நிலையில் பெரும்பாலான விவசாயிகள் இன்சூரன்ஸ் பதிவு செய்யவில்லை .இன்சூரன்ஸ் பதிவு செய்வதற்கு ஓடிபி முறை என்பதால் பெரும் சிரமமாக உள்ளதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துராமு, மாவட்டச் செயலாளர் மயில்வாகணன் ஆகியோர் கூறியதாவது: கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் விவசாயி கள் காத்துக் கிடக்கின்றனர். கம்ப்யூட்டர் சிட்டா வாங்குவ திலும் பயிர் காப்பீடு அடங்கல் பதிவு செய்வதிலும் கடந்த காலத்தை விட கடுமையாக உள்ளது .காரணம் கம்ப்யூட்டர் சிட்டா வாங்குவதற்கு ஓ டி பி நம்பர் தேவைப்படுகிறது. அது போன்று பயிர் காப்பீடு செய்யும் போது ஓடிபி நம்பர் தேவைப்படுகிறது . இதனால் பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. தேர்தல் ஆணை யம் கடந்த நான்காம் தேதி முதல் கிராம நிர்வாக அலு வலர்கள் மற்றும் உதவியாளர்களை வாக்காளர் திருத்த பணிக்கு பணித்துள்ளது . எனவே கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமங்களுக்கு சென்று விடுவதால் விவசாயிகள் அலுவலகத்தில் காத்துக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு பணிகளையும் செய்வதில் அலுவலர்களுக்கு சிரமம் ஏற் படுகிறது. அதைப்போல நவம்பர் 13 அன்று முழுமையாக இணைய சேவை தடைபட்டதால் பயிர் இன்சூரன்ஸ் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதை கவனத்தில் கொண்டு பயிர் காப்பீடு செய்யும் காலத்தை நவம்பர் மாதம் இறுதிவரை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.</p>
