பரிதாபாத் ஷாகி எக்ஸ்போர்ட்ஸ் ஆலைத் தொழிலாளர்களின் ஊதியப் போராட்டம்
3 Oct 2026, 9:02 pm

பரிதாபாத் ஷாகி எக்ஸ்போர்ட்ஸ் ஆலைத் தொழிலாளர்களின் ஊதியப் போராட்டம்

வேலைநிறுத்தம் 65

பரிதாபாத்“கோவிட் பெருந்தொற்றுக் காலத்தைக் காரணம் காட்டி எங்களின் ஆண்டு போனஸ் தொகையை 20 சதவீதத்திலிருந்து வெறும் 8 சதவீதமாகக் குறைத்தது எந்த வகையில் நியாயம்? இதனால் ஒவ்வொருஆண்டும்ஒவ்வொரு தொழிலாளிக்கும் சுமார் 30,000 ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. குடும்பத்தை நடத்தக் கூட வழியின்றி நாங்கள் தவிக்கும் போது, உயர்அதிகாரிகளின் ஊதியம் மட்டும் எப்படி விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்கிறது? போனஸை மீண்டும் 20 சதவீதமாக உயர்த்தும் வரை எங்களின் போராட்டம் ஓயாது!” — ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத், செக்டர்-28 தொழில் மண்டலத்தில் அமைந்துள்ள ‘ஷாகி எக்ஸ்போர்ட்ஸ்’ (Shahi Exports) ஆலை வாயிலில் தொழிலாளர்கள் எழுப்பிய ஆவேசமான வர்க்கக் குரல் இதுவாகும்.ஆடைத் தயாரிப்புத் துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஷாகி எக்ஸ்போர்ட்ஸ் ஆலையில்,ஆண்டு போனஸ் வெட்டுக்கு எதிரானதொழிலாளர்களின் தீரமிக்க போராட்டம் இரண்டாவது நாளாகத் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, இப்போராட்டத்தில் பெரும்பான்மையான பெண் தையல் தொழிலாளர்கள் திரண்டு நின்றுபோராடி வருவது இப்போராட்டத்தின் தனித்தன்மையைக் காட்டுகிறது.

போனஸ் வெட்டும் கோவிட் காலச் சதிகளும்

ஜூலை 17 அன்று தொடங்கிய இந்தப் போராட்டம், நிர்வாகத்தின் தன்னிச்சையான போனஸ் வெட்டு நடவடிக்கை

க்கு எதிரான தொழிலாளர்களின் தீராதகோபத்தின் வெளிப்பாடாகும். நிறுவனத்தின் இந்த ஒருபக்கச் சார்பானஉத்தரவால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உற்பத்தியைப் புறக்கணித்து ஆலை வாயிலில் திரண்டனர்.கோவிட் காலத்திலிருந்து படிப்படியாகக் குறைக்கப்பட்ட போனஸ் தொகையால், தாங்கள் பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர். அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்கு மத்தியில்,தங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சட்டப்பூர்வ உரிமையான போனஸ் தொகையைக் கார்ப்பரேட் நிர்வாகம் பறித்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து நிர்வாகத்துடன்நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எத்தகைய உரிய பதிலும், திருப்திகரமான தீர்வும் அளிக்கப்படாததைத்தொடர்ந்து,தொழிலாளர்கள் அதிரடி வேலைநிறுத்தத்தில் குதித்தனர்.

காவல்துறையின் மிரட்டலும் தொடரும் வர்க்க ஒருமைப்பாடும்

தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில், நிர்வாகம் தரப்பிலிருந்து காவல் துறை நடவடிக்கைப் பற்றிக் கூறப்பட்டதோடு, தொழிலாளர்களின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். எனினும், எத்தகைய மிரட்டல்களுக்கும் அஞ்சாமல், போனஸ்உரிமையை முழுமையாக மீட்கும் வரைபோராட்டம் தொடரும் என்று தொழிலாளர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.தொழிலாளர்கள் பெருமளவில் திரண்டதைத் தொடர்ந்து, செக்டர்-28 மெட்ரோ நிலையம் மற்றும் ஆலைவளாகப் பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். காவல்துறை அதிகாரிகளும் நிறுவனப் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற போதிலும், உடன்பாடு எட்டப்படவில்லை. இந்தியதொழிற்சங்க மையம் (சிஐடியு) உள்ளிட்ட பல்வேறு முற்போக்குத் தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்திற்குத் தங்களின் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன. கார்ப்பரேட் நசுக்கல்களுக்கு எதிராகத் தொழிலாளர்கள் நடத்திய இந்தப் போராட்டம் ஃபரிதாபாத் தொழில் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள

துடன், ஆடைத் துறை தொழிலாளர் மத்தியில் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.(தி லெப்ட் வியூஸ்)