பெண்களுக்கு எதிரான போரில் தீவிர வலதுசாரிகள் - பேரா.விஜய் பிரசாத்
15 Mar 2026, 4:11 pm

பெண்களுக்கு எதிரான போரில் தீவிர வலதுசாரிகள்

லத்தீன் அமெரிக்கா முழுவதும் ஒரு விசித் திரமான போர்ப் பிரகடனம் செய் யப்பட்டுள்ளது. இது நாடாளு மன்றங்களிலோ அல்லது நீதிமன்ற ங்களிலோ மட்டும் நடக்கும் போரல்ல; வகுப்பறைகள், சமையலறைகள், தேவாலயங்கள் மற்றும் இணையத்தின் பரந்து விரிந்த தளங்களில் இந்தப் போர் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் போரின் இலக்குகள் பெண்களும், மாற்றுப் பாலினத் தவர்களும், “வாழ்க்கையை வேறுவிதமாகவும் வாழ முடியும்” என்று பிடிவாதமாகச் சொல்லும் இயக்கங் களுமே ஆகும். பாரம்பரியக் குடும்ப அமைப்பு, ஒழுக் கம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாப்ப தாகக் கூறிக்கொள்ளும் நவீன தீவிர வலதுசாரிகள், உண்மையில் பழைய படிநிலை ஆதிக்கங்களை மீண்டும் நிலைநிறுத்தவே முயல்கின்றனர்.

பெண்ணிய இயக்கங்களின் எழுச்சியும் அதிகாரத்தின் நடுக்கமும் கடந்த பல பத்தாண்டுகளாக, லத்தீன் அமெரிக்கா வின் பெண்ணிய இயக்கங்கள் அதிகாரத்தின் அடித்தளத்தையே உலுக்கியுள்ளன. 1970 மற்றும் 80-களில் நிலவிய சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கி, 21-ஆம் நூற்றாண்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் (Femicide) மற்றும் இனப்பெருக்கம் சார்ந்த உரிமைகளுக்காக (Reproductive rights) நடத்தப்பட்ட பிரம்மாண்ட மான போராட்டங்கள் வரை, பெண்கள் தங்கள் எல்லை யை விரிவுபடுத்தியுள்ளனர். சமூகத்தைத் தாங்கிப் பிடிக்கும் ஊதியமில்லாத வீட்டு வேலைகளைப் பற்றி அவர்கள் பேசத் தொடங்கினர். வீடுகளுக்குள் ஒளிந்தி ருக்கும் வன்முறைகளைத் வெளிச்சமிட்டுக் காட்டினர். உடல்கள், விருப்பங்கள் மற்றும் அடையாளங்கள் அரசுக்கோ அல்லது தேவாலயத்திற்கோ கட்டுப் பட்டவை அல்ல என்பதை அவர்கள் வீதியில் நின்று உரக்கச் சொன்னார்கள். இருப்பினும், இந்த முன்னேற்றங்கள் நவீன தாரா ளவாதத்தின் (Neoliberalism) நீண்ட நிழலில் தான் நிகழ்ந்தன. லத்தீன் அமெரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளில், இன்றும் பராமரிப்புப் பணிகளின் (Care work) பெரும் சுமை பெண்களின் தோள்களிலேயே சுமத்தப்பட்டுள்ளது.

பெண்கள் குறைவான ஊதி யத்திற்கு அதிக நேரம் உழைக்கின்றனர்; கோடிக் கணக்கான பெண்களுக்குத் சுயேச்சையான வருமானம் இல்லை. ‘பராமரிப்பு சமூகம்’ எனும் கனவு 2025 ஆகஸ்ட் மாதம் மெக்சிகோ நகரில் நடை பெற்ற லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் பெண்க ளுக்கான 16-வது மண்டல மாநாட்டில் இந்த எதார்த்தம் அங்கீகரிக்கப்பட்டது. அங்கு ‘த்லாடெலோல்கோ அர்ப்பணிப்பு’ (Tlatelolco Commitment) என்ற ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது 2025 முதல் 2035 வரையிலான பத்தாண்டுகளை ஒரு ‘பராமரிப்பு சமூகத்தை’ (Care society) உருவாக்குவதற்கான காலமாகக் கருதுகிறது. அதாவது, வாழ்க்கையைத் தாங்கிப் பிடிக்கும் வேலை என்பது பெண்களின் தனிப்பட்ட சுமையல்ல, அது ஒட்டுமொத்த சமூ கத்தின் கூட்டுப் பொறுப்பு என்ற கருத்தை இது முன் வைக்கிறது. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 15.9% முதல் 25.3% வரை பெண்களின் ஊதியமில்லாத வீட்டு வேலைகளின் மதிப்பாக உள்ளது. இந்தப் உழைப்புதான் தொழிலாளர் சக்தியை மீண்டும் உருவாக்குகிறது மற்றும் சமூகத்தை இயங்க வைக்கிறது.

ஆனால், 1975 மற்றும் 1985-களில் நடந்த உலகப் பெண்கள் மாநாடுகளில் ஒலித்த அதே கவலைகள் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் 2025-ல் எதிரொலிப்பது, நாம் முன்னேற்றத்தை நோக்கிப் போகிறோமா அல்லது பின்னோக்கிப் போகிறோமா என்ற கேள்வியை எழுப்புகிறது. ‘பாலின சித்தாந்தம்’ எனும் மாய எதிரி நெருக்கடி காலங்களில், ஆளும் வர்க்கங்கள் முன்னேற்றப் பாதையைத் தடுக்கப் புதிய எதிரிகளைத் தேடுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில், தீவிர வலதுசாரிகள் ‘பாலின சித்தாந்தம்’ (Gender ideology) என்பதைத் தங்களின் முக்கிய எதிரியாக மாற்றியுள்ளனர். பெண்ணியம் என்பது நீதி கேட்கும் இயக்கம் அல்ல, அது மனிதகுலத்திற்கு எதிரான ஒரு சதி என்று அவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். தந்தை, தாய் மற்றும் குழந்தைகளைக் கொண்ட ‘குடும்பம்’ என்ற அமைப்பு முற்றுகையிடப்பட்டுள்ள ஒரு கோட்டையைப் போலச் சித்தரிக்கப்படுகிறது.

உண்மையில், சிக்கன நடவடிக்கைகள், சுரண்டல் மற்றும் வறுமை ஆகியவற்றால் ஏற்படும் துன்பங் களை மறைக்க, இந்த வலதுசாரிகள் மக்களின் கோபத்தைப் பெண்ணிய இயக்கங்களுக்கு எதிராகத் திருப்புகின்றனர். இதற்காக ‘என் குழந்தைகளுடன் விளையாடாதே’ (Con Mis Hijos No Te Metas) போன்ற பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 2016-ல் கொலம்பியாவில் பாலியல் கல்விக்கு எதிராகத் தொடங்கிய இந்தப் பிரச்சாரம், இன்று லத்தீன் அமெரிக்கா முழுவதும் பரவியுள்ளது. ‘குழந்தைகளின் அப்பாவித்தனத்தைப் பாது காப்பதாக’ச் சொல்லும் இந்த அமைப்புகள், பெண் களுக்கு எதிராக நிலவும் உண்மையான வன்முறை களை மறைக்கின்றன. லத்தீன் அமெரிக்காவில் 63% முதல் 76% வரையிலான பெண்கள் ஏதோ ஒரு வகை வன்முறையைச் சந்தித்துள்ளனர்.

ஒவ்வொரு நான்கு பெண்களில் ஒருவர் தனது துணையால் உடல்ரீதி யான அல்லது பாலியல் ரீதியான வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார். வலதுசாரிகளின் சர்வதேச வலைப்பின்னல் டிரைகாண்டினென்டல் அமைப்பின் மிகச் சமீபத்திய ஆய்வறிக்கையான ‘லத்தீன் அமெரிக்க தீவிர வலதுசாரிகளின் பெண்ணிய எதிர்ப்பு செயல்திட்டம்’ (The Anti-Feminist Agenda of the Latin American Far Right, March 2026), இந்த வலதுசாரி இயக்கங்கள் எவ்வாறு தனித்தனியாக இயங்காமல் ஒரு சர்வதேச வலைப்பின்னலாகச் செயல்படுகின்றன என்பதை விளக்குகிறது. வாஷிங்டன் முதல் பிரேசிலியா வரை, புடாபெஸ்ட் முதல் மெக்சிகோ வரை இவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். இவர்களுக்குப் பெரும் நிதி நிறு வனங்களும், பழமைவாத அமைப்புகளும் ஆதரவளிக் கின்றன. ‘சுதந்திரம்’ என்ற வார்த்தையை இவர்கள் தனியார்மயம், ஆதிக்க கட்டமைப்பு மற்றும் உரிமை களில் இருந்து பெண்கள் உள்ளிட்ட எளியோரை விலக்கி வைப்பதற்கான உரிமை என்பதாகப் பயன்படுத்துகின்றனர். டிஜிட்டல் தளங்கள் மூலம் உண்மையை விட வேகமாகப் பொய்களும் வெறுப்பும் பரப்பப்படுகின்றன.

இரு வேறு பார்வைகள்: காட்டுமிராண்டித்தனமா அல்லது கண்ணியமான வாழ்வா? 2015-2019 காலப்பகுதியில் லத்தீன் அமெரிக்கா ஒரு வலிமையான பெண்ணிய எழுச்சியைக் கண்டது. கருக்கலைப்பு உரிமையைக் கோரிப் பச்சை நிறத் துண்டுகளுடன் பெண்கள் வீதிகளில் திரண்டனர். இந்தத் போராட்டங்கள் ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்தின: பாலினம் குறித்த போராட்டம் என்பது வெறும் அடையாளம் சார்ந்தது மட்டுமல்ல, அது சமூகக் கட்டமைப்பைப் பற்றியது. வலதுசாரிகள் விரும்பும் சமூகம் அதிகாரம், படிநிலை மற்றும் கீழ்ப்படிதலின் அடிப்படையில் அமைந்தது. அங்கு பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளைப் பெண்கள் ஊதியமில்லாத வீட்டு வேலை களின் மூலம் தாங்கிக் கொள்ள வேண்டும்.

ஆனால் பெண்ணிய இயக்கங்கள் கற்பனை செய்யும் சமூகம் லாபத்தை விடப் பராமரிப்பிற்கும், போட்டியை விட ஒருமைப்பாட்டிற்கும், பணக் குவிப்பை விட வாழ்க்கைக்கும் முன்னுரிமை அளிக்கிறது. இந்த இரண்டு பார்வைகளுக்கும் இடையிலான போராட்டமே நம் காலத்தின் பெரும் போராட்டமாகும். ஒன்று முதலாளித்துவக் காட்டுமிராண்டித்தனம், மற்றொன்று வாழ்க்கை மற்றும் கண்ணியம். மெக்சிகோ நாட்டின் பெண்ணியக் கவிஞர் ரொசாரியோ காஸ்டெல்லானோஸ் (Rosario Castella nos) தனது ‘கடவுச்சீட்டு’ (Passport) என்ற கவிதையில் எழுதிய வரிகள் இன்றும் பொருத்தமானவை. அடை யாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் எவ்வாறு மனிதர்களை வகைப்படுத்துகின்றன என்பதை அவர் அப்படிக் கூறுகிறார்: “சிந்தனை கொண்ட பெண்ணா? இல்லை, என்னிடம் அது இருந்ததில்லை. செயல் வீரப் பெண்ணா? இல்லை, அதுவும் இல்லை.

எனது கைகள் மற்றும் பாதங்களின் அளவைப் பார்த்தாலே அது தெரியும். அப்படியானால் சொற்களின் பெண்ணா? ஆம்... ஆனால் ஒரு விளக்கம் தேவைப்பட்டால் எனது அடையாள அட்டையில் எழுதுங்கள்: நான் நல்நோக்கம் கொண்ட ஒரு பெண், நரகத்திற்குச் செல்வதற்கான நேரடியான மற்றும் எளிதான பாதையை நானே செப்பனிட்டு வைத்திருக்கிறேன்.” லத்தீன் அமெரிக்காவின் நகர வீதிகள் முதல் ஏழை, எளிய மக்களின் சமூகச் சமையலறைகள் வரை, பல லட்சக்கணக்கான பெண்கள் இன்றும் ஒரு பிரகாச மான உலகைக் கட்டியெழுப்பப் போராடி வருகின்ற னர். அது பயம் மற்றும் படிநிலை ஆதிக்கத்தின் அடிப்ப டையில் அமைந்ததல்ல; மாறாக கண்ணியம் மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் அமைந்தது. தமிழில் சுருக்கம் : எஸ்.பி.ஆர்