தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சுவர் இடிந்து விழுந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய குடும்பம்

3 Dec 2025, 2:59 pm
சுவர் இடிந்து விழுந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய குடும்பம்
<p><strong>சுவர் இடிந்து விழுந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய குடும்பம்</strong></p> <p>பொள்ளாச்சி, டிச. 3- பொள்ளாச்சி ஜூபிலி &nbsp;கிணறு வீதியில் தொடர் &nbsp;மழையின் காரணமாக வீட் டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டில் &nbsp;உறங்கிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் நல் வாய்ப்பாக உயிர் தப்பினர். கோவை, பொள்ளாச்சி &nbsp;ஜூபிலி கிணறு வீதியில் &nbsp;வசித்து வருபவர் சித்ரா. &nbsp;இவர் அப்பகுதியில் உள்ள தனியார் துணிக் கடையில் பணிபுரிந்து வருகிறார். சித்ராவும் &nbsp;அவரது தாயார் லட்சுமியும் இந்த பூர்வீக &nbsp;வீட்டில் வசித்து வருகின்றனர். சித்ராவின் &nbsp;மகள் சண்முகப்பிரியா, மருமகன் சிவக் குமார் மற்றும் அவர்களது பேரக்குழந்தை கள் கிருத்திகராஜ், தீக்சன் ஆகியோரும் &nbsp;சமீபகாலமாக இங்கு தங்கி வந்துள்ளனர். இந்நிலையில், பொள்ளாச்சி மற்றும் அத னைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த செவ் வாய்க்கிழமை முதல் புதன்கிழமை அதி காலை வரை கனமழை கொட்டித் தீர்த்தது. &nbsp;இந்தத் தொடர் மழையின் காரணமாக, சித்ரா வின் பூர்வீக வீட்டின் பழமையான பக்க வாட்டுச் சுவர் புதனன்று திடீரென இடிந்து விழுந்ததுw. இந்தச் சம்பவத்தின்போது, வீட்டிற்குள் ஐந்து பேரும் உறங்கிக் கொண்டிருந்தனர். சுவர் இடிந்து விழுந்த அதிர்ச்சியிலும் சத்தத் திலும் விழித்த அவர்கள், சுவர் விழுந்த பகுதி யில் இருந்து விலகிச் சென்று, சிறு காயங்களு டன் பெரும் விபத்தில் இருந்து நூலிழை யில் உயிர் தப்பினர். சம்பவம் குறித்து தகவலறிந்த பொள் ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசார் &nbsp;மற்றும் தீயணைப்பு மீட்புக் குழுவினர் உடன டியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். &nbsp;இடிபாடுகளில் சிக்கியிருந்த குடும்பத்தின ரை பத்திரமாக மீட்டு, பாதுகாப்பான இடத் திற்கு அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி நகர &nbsp;மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் குமரன் மற்றும் வருவாய்த்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, இடிந்து விழுந்த வீட்டை நேரில் ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான உதவி களை உடனடியாக செய்து தருவதாக அதி காரிகள் உறுதியளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.