தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாலை விபத்தில் இளைஞர் மரணம் உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பத்தினர்

15 Feb 2026, 3:03 pm
 சாலை விபத்தில் இளைஞர் மரணம்  உடல் உறுப்புகளை  தானம் செய்த குடும்பத்தினர்
<p><strong>&nbsp;சாலை விபத்தில் இளைஞர் மரணம் &nbsp;உடல் உறுப்புகளை &nbsp;தானம் செய்த குடும்பத்தினர்</strong></p> <p>கடலூர், பிப். 15- கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த ம.மனிஷ்குமார் (19) என்பவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப் பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக செயல்பட்டு வரு கிறார். அவரது இளைய மகன் ம.மனிஷ் குமார் ( வயது 19 ) &nbsp;கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுபாக்கம் கிராமத்தில் தமது பெரியம்மா வீட்டில் தங்கி &nbsp;ஸ்டூடியோவில் பணியாற்றி வந்தார். &nbsp;இவர், கடந்த 12 ஆம் தேதியன்று &nbsp;வேலை முடிந்து ஷேர் ஆட்டோ வில் சென்று கொண்டிருந்தபோது அவரது ஆட்டோ சிறுபாக்கம் என்ற இடத்தில் &nbsp;திரும்பும்போது விபத்தில் சிக்கியது. இதில் அவர் &nbsp;படுகாயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 14 ஆம் தேதி உயிரிழந்தார். &nbsp;இதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தி னரின் ஒப்புதலோடு உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. அவரது உடல் கள்ளக் குறிச்சி மாவட்டம் பெத்தாசமுத்திரம் கிரா மத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்ன தாக, தமிழக அரசின் உத்தரவின்படி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின் பேரில், வருவாய் கோட்டாட்சியர் முருகன் அவரது உடலுக்கு மலர்மாலை அணிவித்து அரசு மரி யாதை செலுத்தினார். உயிரிழந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்வது என்று &nbsp;சிபிஎம் கிளைசெயலாளர் &nbsp;மணிகண்டன் மற்றும் அவரது &nbsp;குடும்பத்தினரின் &nbsp;முடிவு பலருக்கும் முன்னுதாரணமாக அமைந்துள் ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.