மாலியில் பயங்கரவாதிகளால் 5 தமிழக தொழிலாளர்கள் கடத்தல் பாதுகாப்பாக மீட்க குடும்பத்தினர் கோரிக்கை
10 Nov 2025, 2:46 pm
<p><strong>மாலியில் பயங்கரவாதிகளால் 5 தமிழக தொழிலாளர்கள் கடத்தல் பாதுகாப்பாக மீட்க குடும்பத்தினர் கோரிக்கை</strong></p>
<p>சென்னை, நவ. 10 - கடந்த வாரம் மாலியில் பயங்கர வாதிகளால் 5 தமிழர்கள் கடத்தப் பட்டனர். இவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்க வேண்டும் என குடும்பத்தினர் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஐந்து தொழி லாளர்களும் மாலியில் மின் உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், மாலி நாட்டின் ராணுவ அரசுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தி, உள்நாட்டு அமைதியை சீர் குலைத்து வருகின்ற அல்-கொய்தா, ஐ.எஸ்.எஸ், போன்ற பயங்கரவாத அமைப்புகள் அல்லது அவற்றுடன் தொடர்புடைய கிளை அமைப்புகள் இவர்களை கடத்தியதாக கூறப்படு கிறது. எனினும் எந்த பயங்கர வாதக் குழுவும் இதற்கு பொறுப்பேற்க வில்லை. இந்நிலையில் தொழிலாளர்களது குடும்பத்தினர், தங்கள் குடும்ப உறுப்பினர்களை மீட்க தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப் பிடாரம் அருகே கொடியன்குளத்தைச் சேர்ந்த புதியவன் (52), நாரைக் கிணறு கிராமத்தைச் சேர்ந்த பொன்னுத்துரை (41), கலப்பைப் பட்டியைச் சேர்ந்த பேச்சிமுத்து என்ற முத்துசாமி (41) ஆகியோரும் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த இசக்கிராஜா (36), கடையநல்லூர் கண்மணிபுரத்தைச் சேர்ந்த தளபதி சுரேஷ் (26) ஆகியோர் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களின் குடும்பத்தினரை தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி. சண்முகையா நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், மாவட்ட எம்.பி.யான கனிமொழி ஆகியோரின் கவனத்துக்கு இந்த தகவலை எடுத்துச் சென்றுள்ளதாகவும், ஒன்றிய அரசின் உதவியுடன் கடத்தப்பட்டு ள்ள தொழிலாளர்களை மீட்க தமிழ்நாடு அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள் ளார். இந்தியத் தூதரகம் ‘எக்ஸ்’ சமூகதளத்தில் வெளியிட்ட பதிவில், 2025 நவம்பர் 6 அன்று மாலியில் எங்கள் நாட்டின் ஐந்து குடிமக்கள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்துத் தூதரகம் அறிந்துள்ளது. அவர்களை விரைவில் பாதுகாப்பாக மீட்பதற்காக மாலி அதிகாரிகளுடன் இந்தியத் தூதரகம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளது.</p>
