பாஜகவிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கட்சியில் இணையும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
11 Apr 2026, 5:30 am

பாஜகவிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கட்சியில் இணையும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

திரிபுரா மாநிலத்தில் நடைபெற்று வரும் பாஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து வருகின்றனர். நாளுக்கு நாள் அதிருப்தி அதிகமாகி வருகிறது. இந்நிலையில், திரிபுரா மாநிலத்தின் அம்பி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தாய்டு பகுதியின் ராஜாராம் பாராவில் 70 குடும்பங்க ளைச் சேர்ந்த 219 வாக்காளர்களும், ஹரிபூர் பகுதியில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 8 வாக்கா ளர்களும் என மொத்தம் 73 குடும்பங்களைச் சேர்ந்த 227 வாக்காளர்கள் பாஜக மற்றும் திப்ரா மோதா (பாஜகவின் கூட்டணி கட்சி) ஆகிய கட்சிகளிலிருந்து விலகி, செங்கொடியை கையில் ஏந்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யில் இணைத்தனர். திரிபுரா பழங்குடியினப் பகுதிகள் தன்னாட்சி மாவட்டக் கவுன்சில் (TTAADC) தேர்தலுக்கு முன்னதாக பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிபிஎம்-இல் இணைந்து வருவது இடதுசாரி கூட்டணிக்கு சாதகமாக அமையும் என அரசியல் வல்லு நர்கள் கூறியுள்ளனர். பழங்குடியின தன்னாட்சி மாவட்டக் கவுன்சில் தேர்தல் ஏப்ரல் 12 அன்றும் வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 17 அன்றும் நடைபெறுகிறது என்பது குறிப்பி டத்தக்கது.