சாம்சங் தொழிலாளர் போராட்டம் வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்கு
10 Apr 2026, 5:30 am

சாம்சங் தொழிலாளர் போராட்டம் வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்கு

சென்னை, ஏப். 9- காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் பன்னாட்டு நிறுவனத்தில் தொழிற்சங்க உரிமைக்காகப் போராடிய தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்தில் இணைந்து கடந்த அக்டோபர் 10, 2024 அன்று போராட்டம் நடத்தினர்.

அந்த போராட்டத்தை அடக்க முற்பட்ட காவல்துறை, சிஐடியு காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் சட்டவிரோதமாக கைது செய்து காவல் நிலையத்தில் அடைத்தது. அன்று நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் ஒரு திருமண மண்டபத்தில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டனர்.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வந்த வழக்கறிஞர்கள் ஆர். திருமூர்த்தி மற்றும் எஸ். குந்திரிநாத் ஆகியோர் மீது காவல் துறை பொய் வழக்குகள் பதிவு செய்துள்ளது. இதனை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டித்துள்ளது.