தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மரவள்ளிக் கிழங்கு விலை சரிவு: விவசாயிகள் கவலை

2 Dec 2025, 4:11 pm
மரவள்ளிக் கிழங்கு விலை சரிவு: விவசாயிகள் கவலை
<p><strong>மரவள்ளிக் கிழங்கு விலை சரிவு: விவசாயிகள் கவலை</strong></p> <p>எம்.பிரபாகரன் நாமக்கல், டிச.2- மரவள்ளிக் கிழங்கு டன்னுக்கு ரூ. 500 வரை குறைந்துள்ளதால், பயிர் &nbsp;செய்துள்ள விவசாயிகள் கவலை &nbsp;அடைந்துள்ளனர். &nbsp;நாமக்கல் மாவட்டம், பரமத்தி &nbsp;வேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி களான எஸ்.வாழவந்தி, பெரியகரசப் பாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, &nbsp;பொத்தனூர், கூடச்சேரி, கபிலர் மலை, சின்னமருதூர், சோழசிரா மணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் விவசாயிகள் மர வள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள் ளது. இப்பகுதிகளில் விளையும் மர வள்ளிக் கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மல வேப்பங்கொட்டை, ஆத்தூர் உள் ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு &nbsp;ஆலைகளுக்கு அனுப்பி வருகின்ற னர். கிழங்கு ஆலையில் மரவள்ளிக் கிழங்கிலிருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங் கிச் செல்கின்றனர். மரவள்ளிக் கிழங்குகளை வாங் கும் ஆலை உரிமையாளர்கள் மர வள்ளிக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து &nbsp;மற்றும் புள்ளிகள் அடிப்படையில் &nbsp;விலை நிர்ணயம் செய்கின்றனர். &nbsp;கடந்த வாரம் தாய்லாந்து வெள்ளை ரக மரவள்ளிக் கிழங்கு டன் ஒன்றுக்கு &nbsp;ரூ.6,200க்கு விற்பனையானது. தற் போது டன் ஒன்றுக்கு ரூ.500 வரை விலை சரிவடைந்து ரூ.5,700க்கு விற் பனையாகிறது. பர்மா ரோஸ் மற்றும் &nbsp;வெள்ளை ரக மரவள்ளிக் கிழங்கு &nbsp;டன் ரூ.5,900க்கு விற்பனையானது. தற்போது ரூ.5,400க்கு விற்பனையா கிறது. ரூ.5,600க்கு விற்பனையான முள்ளுவாடி ரக மரவள்ளிக் கிழங்கு &nbsp;தற்போது ரூ.5,100க்கு விற்பனையா கிறது. அதேபோல சிப்ஸ் தயாரிக் கும் தாய்லாந்து கருப்பு ரக மரவள் ளிக் கிழங்கு கடந்த வாரம் டன் ஒன்று &nbsp;ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.600 வரை விலை குறைந்து ரூ.6,400க்கு விற்பனையாகிறது. சிகப்பு ரக மரவள்ளிக் கிழங்கு டன்னுக்கு ரூ. 9 ஆயிரத்துக்கு விற் பனையானது. தற்போது டன் ஒன் றுக்கு ரூ.1,000 வரை சரிவடைந்து டன் &nbsp;ஒன்று ரூ. 8 ஆயிரத்திற்கு விற்பனை யானது. முள்ளுவாடி ரக மரவள்ளிக் கிழங்கு ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனை யான நிலையில், தற்போது டன் &nbsp;ஒன்றுக்கு ரூ.1,000 வரை சரிவடைந்து &nbsp;ரூ.6 ஆயிரத்திற்கு விற்பனையானது. மரவள்ளிக்கிழங்கு விலை தொடர்ந்து சரிவடைந்துள்ளதால் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.