பிரபல வணிக நிறுவனங்களின் பெயரில் போலி கொசு விரட்டி திரவப் பாட்டில்கள் பறிமுதல்
17 May 2026, 10:32 pm

பிரபல வணிக நிறுவனங்களின் பெயரில் போலி கொசு விரட்டி திரவப் பாட்டில்கள் பறிமுதல்

தூத்துக்குடி, மே 17- தூத்துக்குடியில் பிரபல வணிக நிறுவனங்களின் பெயரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த போலி கொசு விரட்டி திரவ பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மீனாட்சிபுரம் விக்டோரியா சாலை மற்றும் ஜீன் பேக்டரி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில், பிரபல நிறுவனத்தின் முத்திரையோடு போலி கொசு விரட்டி திரவங்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படுவதாகப் பாபு என்பவர் திருநெல்வேலி அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் அளித்துள்ளார்.

இத்தகவலின் அடிப்படையில், அமலாக்கப் பிரிவு போலீசார் மே 16 அன்று தூத்துக்குடிக்கு விரைந்து வந்து சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்

. போலீசார் நடத்திய இந்த அதிரடி வேட்டையில், தூத்துக்குடியின் முக்கிய வணிக நிறுவனங்களான ‘வேலவன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘குரு டிரேடர்ஸ்’ ஆகிய இரு கடைகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது, சந்தையில் அதிக வரவேற்பைப் பெற்ற ‘ஆல் அவுட்’ கொசு வர்த்தி தைல பாட்டில்கள் போன்றே அச்சு அசலாகப் போலியாகத் தயாரிக்கப்பட்ட 1,014 போலி திரவ பாட்டி ல்கள் விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்ப ட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் சந்தை மதிப்பு ரூ.86,190 ஆகும்.

இதையடுத்து, அந்தப் போலி கொசு விரட்டி பாட்டில்கள் அனைத்தையும் போலீசார் முறைப்படி பறிமுதல் செய்தனர்.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் அறிவுசார் சொத்துரிமை மற்றும் வர்த்தக முத்திரையைத் தவறாகப் பயன்படுத்தி, போலிப் பொருட்களை விற்றுப் பொதுமக்களின் சுகாதாரத்தோடு விளையாடிய குற்றத்திற்காக, சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களின் உரிமையாளர்கள் / மேலாளர்கள் 2 பேர் மீது அறிவுசார் அமலாக்கப் பிரிவு போலீசார் சட்டம்-ஒழுங்கு பிரிவினரின் உதவியோடு வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடை காலத்தின் இறுதிப் பகுதியில் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ள சூழலைப் பயன்படுத்தி, தூத்துக்குடியின் முக்கியக் கடைகளிலேயே இத்தகைய போலிப் பொருட்கள் விற்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் உள்ளூர் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.