போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவுபாதிக்கப்பட்டவர் தர்ணா
10 hours before

போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவுபாதிக்கப்பட்டவர் தர்ணா

சங்கராபுரம், ஆக.31 –கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த சடையாண்டி என்பவருக்கு சொந்தமான 5 சென்ட் இடத்தை, மர்ம நபர்கள் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சடையாண்டி, திங்களன்று (ஆக.31.) சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு பெட்ரோல் கேனுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த போலீசார் அவரை அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.