முந்தய பக்கம்

எக்ஸ் கணக்குகளை நீக்கக் கோரி தில்லி போலீஸ் பெயரில் போலி நபர்கள் நோட்டீஸ்!

3 hours before
எக்ஸ் கணக்குகளை நீக்கக் கோரி தில்லி போலீஸ் பெயரில் போலி நபர்கள் நோட்டீஸ்!
<p>எக்ஸ் கணக்குகளை நீக்கக் கோரி தில்லி போலீஸ் பெயரில் போலி நபர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக எக்ஸ் நிறுவனம் தில்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறி, டிஜிட்டல் உரிமைகளுக்காகப் போராடும் இணைய சுதந்திர அறக்கட்டளை (Internet Freedom Foundation – IFF), மென்பொருள் (Software Freedom Law Center SFLC), GeoBlockedindia ஆகிய அமைப்புகளின் கணக்குகள் மற்றும் மேலும் 16 பயனர்களின் பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிறுவனத்திற்கு தில்லி காவல்துறை நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. இதை தொடர்ந்து, தங்கள் எக்ஸ் கணக்குகள் நீக்க உத்தரவுக்கு எதிராக IFF மற்றும் SFLC ஆகிய நிறுவனங்கள் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நீதிபதி அமித் மகாஜன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, IFF மற்றும் SFLC அமைப்புகளின் எக்ஸ் கணக்குகளை நீக்கக் கோரி எக்ஸ்-க்கு அனுப்பப்பட்ட உத்தரவு நோட்டீஸ்கள் தில்லி காவல்துறை பெயரில் போலி நபர்களால் அனுப்பப்பட்டுள்ளது என தில்லி உயர் நீதிமன்றத்தில் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>மேலும், இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்துள்ளதாகவும், IFF மற்றும் SFLC கணக்குகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram