பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் நியாயவிலை கடை திறப்பு விழா
7 Mar 2026, 2:36 pm
<p><strong>பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் நியாயவிலை கடை திறப்பு விழா</strong></p>
<p>திருப்பத்தூர், மார்ச் 7- ஜோலார்பேட்டை ஒன்றியம், திரியாலம் ஊராட்சி பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் தாமலேரிமுத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிட் சார்பில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா ஒன்றிய குழு தலைவர் சத்தியா சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் திமுக ஒன்றிய செயலாளர்கள் கவிதா தண்டபாணி, சதிஷ் குமார், ஊராட்சி மன்ற தலைவர் ரவி, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் லோகநாதன், விற்பனையாளர் குப்பன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆளும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் சென்னை, மார்ச் 7- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் கே.எம்.பிரவீனா தலைமையிலான குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் பெகரா என்பதும், அவரது பையை சோதனை செய்தபோது அதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி, பாலக்காட்டுக்கு கொண்டு செல்ல இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, போதை பொருள் தடுப்பு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.</p>
