டிசம்பரில் மாநில அளவில் தர்ணா நியாய விலைக்கடை ஊழியர் சங்கம் முடிவு
16 Nov 2025, 3:30 pm
<p><strong>டிசம்பரில் மாநில அளவில் தர்ணா நியாய விலைக்கடை ஊழியர் சங்கம் முடிவு</strong></p>
<p>கரூர்: தமிழ்நாடு நியாய விலைக்கடை ஊழியர் சங்கத் தின் (சிஐடியு) மாநில நிர்வாகக் குழு கூட்டம் சிஐடியு கரூர் மாவட்டக் குழு அலுவலகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ப. கெளதமன் தலைமை வகித்தார். கரூர் மாவட்டச் செயலாளர் கண்ணன் வரவேற்று பேசினார். சம்மேளனம் பொதுச் செயலாளர் ப. செல்வராஜ், மாநிலச் செயலாளர் எம்.துரைச்சாமி, மாநிலப் பொருளாளர் சா. கிருஷ்ணராஜா ஆகியோர் பேசினர். சம்மேளனம் மாநில நிர்வாகிகள் சிவக்குமார், சுரேஷ், கிரி, சித்ரா, சிஐடியு சங்க மாவட்ட துணைத் தலைவர் ஜி. ஜீவா னந்தம், மாவட்டச் செயலாளர் எம்.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநிலச் செயலாளர் எம். துரைசாமி நன்றி கூறினார். கரூர் மாவட்டத்தில் பாம்பு கடித்து இறந்த விற்பனை யாளர் பிரபாகரனின் குரும்பத்திற்கு நிவாரணம் தொகை வழங்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் ஜெயந்திக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பர் மாதம் சென்னையில் மாநில அளவில் தர்ணா போராட்டம் நடத்து வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. </p>
