சிகப்பு புத்தக தின வாசிப்பு நிகழ்ச்சி
22 Feb 2026, 3:26 pm
<p><strong>சிகப்பு புத்தக தின வாசிப்பு நிகழ்ச்சி</strong></p>
<p>சேலம், பிப்.22- கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை வெளியிட்ட பிப்.21 ஆம்தேதி சிகப்பு புத்தக தினமாக கடைபிடிக்கப்படு கிறது. இந்நாளில் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளைகள் துவங்கி அனைத்து மட்டங் களிலும் சிகப்பு புத்தக வாசிப்பு தினத்தை மார்க் ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன்ஒருபகுதியாக, சேலம் காந்தி ரோடு பகுதியிலுள்ள எல்ஐசி காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க சரோஜா அரங்கத்தில், சர்வ தேச சிகப்பு புத்தக தின வாசிப்பு நிகழ்ச்சி சனி யன்று நடைபெற்றது. இதில் சிபிஎம் மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ் ணன், மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ.கலிய பெருமாள் உட்பட பலர் கலந்து கொண் டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகரக்குழு அலுவலகத்தில், கட்சியின் மாவட் டக்குழு உறுப்பினர் சக்திவேல் தலைமை யில் சிகப்பு புத்தக தின வாசிப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.முருகே சன், நகரச் செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட கலந்து கொண்டனர். இதேபோன்று, பல் வேறு பகுதிகளில் சிகப்பு புத்தக தினம் கடை பிடிக்கப்பட்டு, புத்தக வாசிப்பு நடைபெற் றது. இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
