தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேசிய தேர்வு முகமைக்கு எதிராக அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு

13 May 2026, 9:11 pm
தேசிய தேர்வு முகமைக்கு எதிராக அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு
<p><strong>தேசிய தேர்வு முகமைக்கு எதிராக அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு</strong></p><p>புதுதில்லி நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முக மையை மாற்றவும், நீதிமன்ற மேற்பார்வையில் மறுதேர்வு நடத்த வும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டுள்ளது. அகில இந்திய மருத்துவ சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மூத்த வழக்கறிஞர் தன்வி துபே மூலம் தாக்கல் செய்துள்ள மனு வில்,”நீட் தேர்வுகளை நடத்துவதற்கு தேசிய தேர்வு முகமைக்குப் பதிலாக அதிக வலிமையான, தொழில்நுட்ப ரீதி யாக மேம்பட்ட மற்றும் தன்னாட்சி பெற்ற அமைப்பை உருவாக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும். குறிப்பாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில், ஒரு சைபர் பாது காப்பு நிபுணர், தடய அறிவியல் நிபுணர் ஆகியோரைக் கொண்ட உயரதிகாரக் குழுவை அமைத்து, புதிய தேர்வு முகமை உருவாக்கப்படும் வரை நீட் மறுதேர்வை மேற்பார்வையிட வேண்டும். வினாத்தாள்களை டிஜிட்டல் முறையில் பூட்டுவதற்கும் (Digital locking), வினாத்தாள் கையாளுதலில் ஏற்படும் அபாயங்களைத் தவிர்க்க கணினி வழித் தேர்வு (CBT) முறைக்கு மாறுவதற்கும் உத்தரவிட வேண்டும். வினாத்தாள் கசிவு தொடர்பாக நடை பெற்று வரும் விசாரணை, கண்டறி யப்பட்ட நெட்வொர்க்குகள், கைது செய்யப்பட்டவர்கள், வழக்கின் முன் னேற்றம் குறித்து 4 வாரங்களுக்குள் சிபிஐ நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். முறைகேடுகளை வெளிப்படையாகக் கண்டறியும் வகையில், நீட் 2026 தேர்வு முடிவு களை மையம் வாரியாக வெளியிட வேண்டும்” என மனுவில் வலியுறுத்தப் பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசா ரிக்கப்படும் என செய்திகள் வெளியாகி யுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.