வேகத்தடையில் மறைந்த கோடுகள்! விபத்தில் வாகன ஓட்டிகள் காயம்
10 Oct 2026, 11:20 pm
<p><strong>வேகத்தடையில் மறைந்த கோடுகள்! விபத்தில் வாகன ஓட்டிகள் காயம்</strong></p><p>நாமக்கல், அக்.10-சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள, காளிப்பட்டியில் வேகத்தடையில் வரையப்பட்டிருந்த வெள்ளைக் கோடுகள் மறைந்ததால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.</p><p>சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளிப்பட்டி பகுதியில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நெடுஞ்சாலை துறையினரால் வேகத்தடையில் வெள்ளைக் கோடுகள் வரையப்பட்டது. தற்சமயம் மழை, வெப்பம் உள்ளிட்ட இயற்கை சூழலால் வேகத்தடையில் இருந்த கோடுகள் மறைந்துவிட்டன. இதனால், வாகன ஓட்டிகள் கண்களுக்கு வேகத்தடை புலப்படாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஒரு சில சமயங்களில் வேகத்தடை இருப்பது தெரியாமல், வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகி வருகின்றனர். அருகில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்), அங்கு சென்று மோதக்கூடிய அபாயம் உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேகத்தடையில் மீண்டும் வெள்ளைக் கோடுகள் வரைய நடவடிக்கைஎடுக்க வேண்டும். மேலும், ஒளிரும் மின்விளக்கு, வேகத்தடை உள்ள அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
