தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழிற்சாலைகள் தொழிலாளர்களை இணைக்கும் பண்பாட்டு மையங்கள் சிஐடியு துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் பேச்சு

14 hours before
தொழிற்சாலைகள்  தொழிலாளர்களை  இணைக்கும்  பண்பாட்டு  மையங்கள்  சிஐடியு துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் பேச்சு

தொழிற்சாலைகள் தொழிலாளர்களை இணைக்கும் பண்பாட்டு மையங்கள் சிஐடியு துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் பேச்சு

சென்னை, செப்.6-சென்னை வில்லிவாக்கத்தில், ஐசிஎப்யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியனின் பொன்விழா மலர் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி சனிக்கிழமையன்று (செப். 5) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு யூனியன் தலைவர் ஜெ.பிரான்சிஸ்மெக்கோல்டு தலைமை தாங்கினார். யூனியனின் பொதுச் செயலாளர் கே.டி.ஜோஷி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.விழாவில் சிறப்புரையாற்றிய சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், பொதுத்துறை நிறுவனங்கள் வெறும் தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களை இணைக்கும் பண்பாட்டு மையங்களாகவிளங்குகின்றன என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

வரலாற்று சிறப்புமிக்க வேலை நிறுத்தம்

சிங்கர் தெரு ஹோட்டல் தொழிலாளர் சங்கம், கோகிலா ஹால் கூட்டங்கள், 1968 செப்டம்பர் 19 மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 1974 ரயில்வே தொழிலாளர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க வேலைநிறுத்தம் மற்றும்சென்னை மாநகரின் முன்னாள் மேயரும் சிஐடியு தலைவர்களில் ஒருவருமான எஸ். கிருஷ்ணமூர்த்தி போன்றோரின் பங்களிப்புகளை அடுத்த தலைமுறைக்கு ஆவணப்படுத்தி கொண்டுசெல்ல வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

லாப நோக்கமல்ல மக்கள் நலனே நோக்கம்

பேருந்து, ரயில் போன்ற பொதுப்போக்குவரத்துகள் லாப நோக்கத்துக்காக அல்லாமல் மக்களுக்காக நடத்தப்படுபவை என்றும், ஐசிஎப் போன்றபெருமைமிக்க நிறுவனங்களின் பாரம்பரியத்தை மக்களிடம்சேர்ப்பது அவசியமானது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் ஆளுமைகளும் சிறப்புரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னைமாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, ஐஆர்டிஎஸ்ஏ பொதுச்செயலாளர் கே.வி.ரமேஷ், தென்மண்டல இன்சூரன்ஸ்கூட்டமைப்பின் பொருளாளர் வி.ஜானகிராமன், எழுத்தாளர் ராமச்சந்திர வைத்தியநாத், சிஐடியு மத்தியசென்னை மாவட்ட துணைத் தலைவர் பா.ராஜாராமன், ஐசிஎப்தமுஎகச தலைவர் எஸ்.ஆர்.தமிழ்ச்செல்வன், மலர் வடிவமைப்பாளரும் ஓவியருமான தி.ராஜேந்திரன், பொன்விழா மலர் கன்வீனர் வி.மோகன், மற்றும் இணை கன்வீனர் என்.வேலாயுதம் ஆகியோர் நிகழ்ச்சியைச் சிறப்பித்துப் பேசினர். நிறைவாக, யூனியன் பொருளாளர் ஜி.நடராஜன் நன்றியுரை வழங்கினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.