எழில் நகர் குழந்தைகளின் கல்வியைத் தடுக்கும் வறுமை மற்றும் சமூகச் சூழல்
12 Jun 2026, 11:05 pm

எழில் நகர் குழந்தைகளின் கல்வியைத் தடுக்கும் வறுமை மற்றும் சமூகச் சூழல்

சென்னையின் புறநகர்ப் பகுதியான எழில் நகர் மறுவாழ்வு மையத்தில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி செல்லாக் குழந்தை கள் குறித்த சமீபத்திய ஆய்வு, கல்வியில் அவர்கள் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான சவால்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ‘வறுமை மற்றும் சமூகச் சூழல்’ ஆகிய இரண்டும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பறிக்கும் முதன்மைக் காரணிகளாக இந்த ஆய்வில் உருவெடுத்துள்ளன.

பொருளாதார நெருக்கடியின் தாக்கம்

இந்த ஆய்வில் பங்கேற்ற சுமார் 70% குடும்பங்களின் மாத வருமா னம் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை மட்டுமே உள்ளது. இக்குடும்பங் களின் பெற்றோர்கள் அமைப்பு சாரா தொழில்களான வீட்டு வேலை, தெரு வோர வியாபாரம் மற்றும் தினக்கூலி வேலைகளில் ஈடுபடுகின்றனர். இத்தகைய குறைந்த வருமானம், குழந்தைகளின் அடிப்படைத் தேவை களைப் பூர்த்தி செய்வதிலேயே பெரும் சவாலாக உள்ளது.

குடும்பச் சூழலும் பாதிப்புகளும்

ஆய்வு செய்யப்பட்ட 96 குழந்தை களில், 54 குழந்தைகள் மிகவும் பாதி க்கப்படக்கூடிய சூழலில் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது. குடும்ப வன்முறை, பெற்றோரின் உடல்நலக் குறைவு, பெற்றோரை இழந்த நிலை அல்லது முறையான பராமரிப்பு இல்லாத குடும்பச் சூழல் ஆகியவை குழந்தைகளின் மனநலத்தையும் படிப்பையும் சிதைக்கின்றன. குறிப் பாக, 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினர், குடும்பத்தி ற்குப் பொருளாதார ரீதியாக உதவ வேண்டிய கட்டாயத்தில் படிப்பைப் பாதியில் நிறுத்துகிறார்கள்.

பள்ளிகளில் நிலவும் பாகுபாடு

கல்வி நிறுவனங்களில் நிலவும் பாகுபாடும் ஒரு முக்கியமான காரணி யாகக் கூறப்படுகிறது. கற்றல் குறை பாடுள்ள குழந்தைகள் அல்லது குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த குழந்தைகள், பள்ளிகளிலேயே இழிவு படுத்தப்படுவதால் அவர்கள் கல்வியைத் தொடர விரும்பு வதில்லை. இத்தகைய பாகுபாடு களால் பல குழந்தைகள் பள்ளிகளிலி ருந்து வெளியேற்றப்படுகிறார்கள். இது அவர்களைச் சமூகப் பாதுகாப்பி லிருந்து விடுவித்து, குழந்தை தொழி லாளர் முறை, போதைப் பழக்கம் மற்றும் பிற சமூக விரோதச் செயல் களுக்கு

இட்டுச் செல்கிறது. அடையாள ஆவணங்களின் தட்டுப்பாடு

கல்வி மற்றும் அரசு நலத்திட்டங் களை அணுகுவதில் ஆவணங்கள் இல்லாமை மிகப்பெரிய தடையாக உள்ளது. ஆய்வில் உள்ள 96 குழந்தை களில்: 16 குழந்தைகளிடம் ஆதார் கார்டு இல்லை. 19 குழந்தைகளிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை. 61 குழந்தைகளிடம் சாதி சான்றிதழ் இல்லை. இந்த ஆவணங்கள் இல்லாதது, முறையான பள்ளிக் கல்வியைப் பெறு வதற்கான கதவுகளை அடைத்துவிடு கிறது.

தீர்வுக்கான பரிந்துரைகள்

இந்தச் சிக்கலைத் தீர்க்க வெறும் பள்ளிக் கல்வித்துறை மட்டும் போதாது என்று இந்த ஆய்வு வலி யுறுத்துகிறது. பள்ளி கல்வித்துறை, சமூக நலத்துறை, தொழிலாளர் நலத் துறை, காவல்துறை மற்றும் சுகாதார த்துறை எனப் பல துறைகள் இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளியை விட்டு வெளியேறும் குழந்தைகளைக் கண்காணித்து, அவர்களுக்கு ‘இணைப்பு கல்வித் திட்டங்கள்’ மூலம் மீண்டும் கல்வியை வழங்குவது அவசியம்.