கல்குவாரியால் சுற்றுச்சூழல் பாதிப்பு! நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
24 Jun 2026, 11:53 pm
<p><strong>கல்குவாரியால் சுற்றுச்சூழல் பாதிப்பு! நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை</strong></p><p>திருவண்ணாமலை, ஜூன் 24- திருவண்ணாமலை மாவட்ட எல்லைப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியால் சுற்றுச்சூழல் மாசு, சுகாதாரப் பாதிப்பு மற்றும் விவசாய இழப்புகள் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டிய எய்ப்பாக்கம் கிராம மக்கள், உடனடியாக குவாரியை மூட நடவடிக்கை எடுக்காவிட்டால் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள எய்ப்பாக்கம் கிராமத்தை ஒட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட ராஜம்பாளையம் பகுதியில் தனியார் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த குவாரியின் செயல்பாடுகளால் தாங்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக, வந்தவாசி வட்டாட்சி யர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமா பந்தியில் (வருவாய் தீர்வாய கணக்குத் தணிக்கை), முன்னாள் பாதூர் ஊராட்சி மன்றத் தலைவர் எல். ராஜேந்திரன் தலைமையில் எய்ப்பாக்கம் கிராம மக்கள் திரண்டு வந்து வருவாய் தீர்வாய அலுவலர் மதுசெழியனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றிச் செல்லும் அதிக பாரம் கொண்ட கனரக வாகனங்க ளால் கிராமத்திற்குச் செல்லும் சாலை கடுமையாகச் சேதமடைந்துள்ளது என்றும், இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பாகப் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தினசரி பள்ளிக்குச் செல்ல பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும், சாலை யோரச் சிறு பாலங்கள் உடைந்து மழை நீர் செல்ல முடியாத வகையில் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குவாரியில் இருந்து எழும் தூசி அருகிலுள்ள விவசாய நிலங்க ளில் படிந்து பயிர்கள் கருகிச் சேதமடை வதால், விவசாயிகளுக்குப் பெரும் பொரு ளாதார இழப்பு ஏற்படுவதாகவும், வெடி வைத்துப்பாறைகள் உடைக்கப்படும்போது வெளியாகும் புகை மற்றும் காற்று மாசு காரணமாகக் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கு சுவாசக் கோளாறுகள் அதிகரித்துள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, குடியிருப்பு மற்றும் விவசாயப் பகுதிகளுக்கு அருகில் இயங்கி வரும் இக்கல்குவாரியை நிரந்தரமாக மூட மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்; தவறும்பட்சத்தில் கிராம மக்களைத் திரட்டிப் பெரும் முற்று கைப் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
