முந்தய பக்கம்

மாணவர்களின் கண் கவர் கலை நிகழ்ச்சி

3 Feb 2026, 4:00 pm
மாணவர்களின் கண் கவர் கலை நிகழ்ச்சி
<p><strong>மாணவர்களின் கண் கவர் கலை நிகழ்ச்சி</strong></p> <p>நாமக்கல், பிப்.3- அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவி களின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வையப் பமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நீண்ட நாட்களாக &nbsp;விழா மேடை தேவை என பள்ளி நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், திருச் செங்கோடு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலி ருந்து ரூ.24.5 லட்சம் மதிப்பீட்டில் விழா மேடை கட்டப் பட்டு செவ்வாயன்று திறப்பு விழா நிகழ்ச்சி நடை பெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை வரவேற்றார். திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் இ.ஆர்.ஈஸ் வரன் விழா மேடையை திறந்து வைத்தார். பள்ளி யின் மாணவ, மாணவிகள் கண்கவர் கலை நிகழ்ச்சி களை நடத்தினர். இதில் மாணவர்கள் நடத்திய நாட்டுப் பற்று மிகுந்த ஆட்டம் பாட்டமும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், பள்ளியில் பணி யாற்றிய முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram