தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

16 Feb 2026, 2:37 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

கோவை, பிப்.16- கோவை – ஜெய்ப்பூர் இடையே இயக்கப்பட்டு வரும்  வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவைக்காலம் நீட்டிக்கப்பட் டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு  அலுவலர் ஜி. மரிய மைக்கேல் விடுத்துள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது, கோவை மற்றும் ஜெய்ப்பூர் இடையே திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழி யாக இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை  மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை –  ஜெய்ப்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06181) பிப்ரவரி  26 முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் கோவையில் இருந்து அதிகாலை 02.30 மணிக்கு புறப்பட்டு,  சனிக்கிழமை மதியம் 01.25 மணிக்கு ஜெய்ப்பூரை சென்றடை யும். மறுமார்க்கமாக, ஜெய்ப்பூர் – கோவை வாராந்திர சிறப்பு  ரயில் (எண்: 06182) மார்ச் 1 முதல் மார்ச் 29-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு, புதன்கிழமை காலை 08.30 மணிக்கு கோவை வந்து சேரும்.  இந்த ரயில்கள் சேலம் கோட்டத்திற்குட்பட்ட திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலை யங்களில் நின்று செல்லும்.

பனியன் தொழிலாளர்கள் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

திருப்பூர், பிப்.16- திருப்பூர் பனியன் தொழிலாளர்க ளுக்கு சம்பள உயர்வு குறித்து, 7 ஆவது  சுற்றுப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து பிப்.24 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட் டுள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலு வலக கூட்ட அரங்கத்தில் திங்களன்று  இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற் றது. இதில் உற்பத்தியாளர்கள் தரப் பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட 20%  சம்பள உயர்வு என்பதை 24 % என சற்று  உயர்த்தித் தருவதாக முன்மொழிந்த னர். எனினும் தொழிற்சங்கங்கள் தரப் பில் இதை ஏற்க மறுத்தன. இத்துடன் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில், சம்பள உயர்வுப் பேச்சு வார்த்தையை காலதாமதம் செய்யா மல், நியாயமான சம்பள உயர்வு வழங்க  உற்பத்தியாளர்கள் முன் வர வேண்டும்  என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத் தின. மேலும், காலதாமதம் செய்தால்  தொழிற்சங்கங்கள் கூடி பேசி அடுத்த  கட்டமாக போராட்ட இயக்கத்திற்கு செல்ல வேண்டி இருக்கும் என்றும்  தொழிற்சங்க தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதேசமயம் சம்பள உயர்வு குறித்து உற்பத்தியாளர் சங்கங் கள் கலந்து பேசுவதாகவும், வரும்  24ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சு வார்த்தையை வைத்துக் கொள்ளலாம் என்றும் உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படாமல் முடிந்தது. வரும் பிப்.24ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் பனி யன் தொழிலாளர்களுக்கு உரிய, நியா யமான சம்பள உயர்வு கிடைக்க வேண் டும் என்று எதிர்பார்ப்பதாகவும், இல்லா விட்டால் அடுத்த கட்ட செயல்பாடு  குறித்து அனைத்து தொழிற்சங்கங்கள் கூடிப் பேசி உரிய நடவடிக்கை மேற் கொள்வோம் என்று தொழிற்சங்கத்தி னர் தெரிவித்தனர்.

அணைகள் நிலவரம்

பவானிசாகர் அணை நீர்மட்டம்:86.94/105அடி நீர்வரத்து:109கனஅடி நீர்திறப்பு:2550கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:40.66/160 அடி நீர்வரத்து:25.01கனஅடி நீர்திறப்பு:977.49கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:68.48/72 அடி நீர்வரத்து:1108கனஅடி நீர்திறப்பு:1160கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:85.30/120அடி நீர்வரத்து:131க.அடி நீர்திறப்பு:799கனஅடி திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:46.18/60அடி  நீர்வரத்து:861கனஅடி நீர்திறப்பு:1123கனஅடி

அடகு கடையில் தங்கம், வெள்ளி திருட்டு

கோவை, பிப்.16- சிங்காநல்லூர் பகுதியிலுள்ள அடகு கடையின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து சுமார் 70 சவரன் தங்க நகைகள், 20 கிலோ வெள்ளி திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது. கோவை, சிங்காநல்லூர் வசந்தாமில் பகுதியை சேர்ந்த  ரமேஷ்குமார் கோவை திருச்சி சாலை சிங்காநல்லூர் பகுதி யில் மகாதேவ் என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஞாயிறன்று இரவு சிவராத்திரியை முன்னிட்டு கடைக்கு விடுமுறை அளித்த அவர், வெள்ள லூர் பகுதிக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இதனிடையே கடையின் பின்புறமுள்ள ஷட்டரை உடைத்து உள்ளே சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்த சுமார் 70 சவ ரன் தங்கம் மற்றும் 20 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளை யடித்து தப்பியோடினர். முன்னதாக கொள்ளை சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு சென்ற ரமேஷ்குமார் ஷட்டர் உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி யடைந்து உடனடியாக சிங்காநல்லூர் காவல்நிலைய போலீ சாருக்கு தகவலளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு  சென்ற போலீசார் மோப்பநாய், தடையவியல் சோதனை நிபு ணர்களுடன் தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடு பட்டனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சி  பதிவுகளை சேகரித்து அதன் அடிப்படையில் தப்பியோடிய கொள்ளையர்களை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி  வருகின்றனர்.

பணியாளரை குற்றவாளியாக்கும் தனியார் மருத்துவமனை மீது புகார்

ஈரோடு, பிப்.16- இருப்பு குறைவிற்கு, மகப்பேறு விடுப் பில் சென்ற பணியாளரை குற்றவாளியாக் கும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரி விக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் வனிதா. இவர் கடந்த 19.5.2011 முதல் உதவி செவிலியராக ஈரோடு கொல்லம்பாளையத்தில் உள்ள லோட்டஸ் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். கண் மருத்துவ பிரிவில் உதவியாளராக பணி யாற்றி வந்த நிலையில், கண்ணாடி விற்பனை மையத்திலும் பணி புரிந்து வந்தார். தின சரி வருகை பயொமெட்ரிக் முறையில்  கைரேகை பதிவிடப்படுகிறது. இடையில் வெளி யில் வந்தாலும், மீண்டும் உள்ளே செல்லும் போதும் கணிணியில் பதிவு செய்ய வேண் டும். பணியில் சேரும்போது தனது 10 மற் றும் 12 ஆம் வகுப்பு, ஏஎன்எம் செவிலியர் சான்று ஆகியவற்றை நிர்வாகத்தினர் பெற்றுக் கொண்டனர். ஆப்டிகல்ஸ் பிரிவில் சோதனை செய்பவர்களுக்கும், விற்பனை பிரிவில் உள்ளவர்களுக்கும் உதவி செய்வ தும், வளாகத்தைத் தூய்மையாக வைத்துக்  கொள்வதும் வனிதாவின் பணியாகும். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் இரண்டாவது பிரசவத்திற்கு விடுப்பில் சென் றார். டிசம்பர் இரண்டாவது வாரத்தில் மகப் பேறு விடுப்பில் இருந்தவரை மருத்துவ மனை நிர்வாகத்தின் பொது மேலாளர் ரமா பிரபா தொலைபேசியில் அழைத்ததன் பேரில், மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ஆப்டிகல் பிரிவில் கணிணியில் காட்டும்  இருப்புக்கும், கடையில் உள்ள இருப்புக் கும் வித்தியாசம் உள்ளது. 6 லட்சம் ரூபாய்க்கு பற்றாக்குறை உள்ளது. இதற்கு நீ தான் பொறுப்பு எனவும், இதற்கான தொகையை செலுத்த வேண்டும். இதில் தனது பங்கு ரூ.2  லட்சம் என்றும் எழுதி கையெழுத்திட வேண் டும் என நிர்பந்தப்படுத்தி எழுதி பெற்றுள் ளனர். அத்துடன் மருத்துவமனை நிர்வாகம் பல முறை போனில் தொடர்பு கொண்டும், நேரில் வீட்டிற்கு ஆட்களை அனுப்பியும் மிரட்டி  வருகின்றனர். மேலும், கல்வி சான்றிதழ் களை அழித்து விடுவதாகவும் மிரட்டி வருகின் றனர். இதனால் மிகுந்த மன உளைச்சல டைந்த வனிதா, தான் செய்யாத தவறுக்கு என்னை பொறுப்பாக்கி, மிரட்டி எழுதி வாங்கி யது என்பது நான் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவள் என்பதாலேயே ஆகும். எனவே, என்மீது பொய்யான குற்றச் சாட்டை சுமத்தி கட்டாயப்படுத்தி எழுதி வாங் கிய லோட்டஸ் மருத்துவமனை நிர்வாகத் தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். படிப்பு சான்றிதழ்களை (அசல்) திரும் பக் கொடுத்திடவும், நான் பணியாற்றியதற் குரிய பணி சான்றிதழையும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி திங்களன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் வனிதா புகார ளித்தார்.

இன்று கிராம சபைக் கூட்டம்

ஈரோடு, பிப்.16- ஈரோடு மாவட்டத்தி லுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் செவ்வா யன்று (இன்று) சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.  ஈரோடு மாவட்டத்தி லுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ‘கலைஞ ரின் கனவு இல்லம் திட்டம் 2025-26’ இலக்கினை அடைய தகுதியான பயனா ளிகளை தேர்வு செய்யும் பொருட்டு, சிறப்பு கிராம  சபைக் கூட்டம் நடைபெற வுள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண் டும். அனைத்து கிராம ஊராட் சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் முறை யாக நடைபெறுவதை கண் காணிக்கும் பொருட்டு, வட்டார அளவில் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றா ளர்கள் நியமிக்கப்பட்டுள்ள தாக ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

தாராபுரத்தில் புதிய பேருந்துகள், வழித்தடங்கள் தொடக்கம்

திருப்பூர், பிப்.16 -  திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சி பேருந்து நிலை யத்தில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகத்தின் புதிய பேருந்துகள் மற்றும் புதிய வழித்தடங்களில் இயக்கும் நகரப்  பேருந்துகளை, அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி  செல்வராஜ் ஆகியோர் ஞாயிறன்று துவக்கி வைத்தனர்.  திருப்பூர் மாவட்டம். தாராபுரம் பேருந்து நிலையத்தில் திருப்பூர் – தஞ்சாவூர், திருப்பூர் – மதுரை, திருப்பூர் – திண்டுக் கல், திருப்பூர் – புதுக்கோட்டை, கோயம்புத்தூர் – பழனி ஆகிய  வழித்தடங்களில் புதிய பேருந்துகள் துவக்கி வைக்கப் பட்டது.  மேலும், தாராபுரத்திலிருந்து கொங்கூர் வழியாக அலங்கி யத்திற்கும், ரெட்டார வலவு, கணியூர் வழியாக பொன்னிவா டிக்கும், ஆச்சியூர் வழியாக காட்டம்பட்டிக்கும் கூடுதலாக நகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.  இந்நிகழ்ச்சியில், ஈரோடு எம்பி. கே.இ.பிரகாஷ், தாரா புரம் நகர்மன்றத் தலைவர் பாப்புக்கண்ணன் உள்பட அரசு  அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ரூ.55 ஆயிரத்து 599 கோடி கடன் திட்ட அறிக்கை நபார்டு வங்கி மதிப்பீட்டை ஆட்சியர் வெளியிட்டார்

திருப்பூர், பிப்.16 - திருப்பூர் மாவட்டத்திற்கு 2026-27 ஆம் ஆண்டுக்கு ரூ.55 ஆயிரத்து 599  கோடியே 81 லட்சம் அளவுக்கு கடனாற் றல் மதிப்பீட்டிலான நபார்டு வங்கியின்  வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை  மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே வெளியிட்டார். இந்த அறிக்கையை கடந்த 11ஆம் தேதி வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே கூறுகையில், வங்கி கள் முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பல அரசு துறைகள்,  வங்கிகள், மற்றும் அனைத்து துறை  சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவர அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை அதிக ரிக்கும் அரசின் நோக்கத்தையும் கருத் தில் கொண்டு இந்த வளம் சார்ந்த கடன்  திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது என் றார். 2026 – 27 ஆம் ஆண்டுக்கு வேளாண்  கடன் ரூ.15 ஆயிரத்து 386 கோடி உள்ளிட்ட மொத்த விவசாயக் கடன் ரூ.21 ஆயிரத்து 275 கோடியே 65 லட் சத்து 30 ஆயிரம், சிறு, குறு, நடுத்தரத்  தொழில்களுக்கு ரூ.32 ஆயிரத்து 680 கோடியே 45 லட்சத்து 60 ஆயிரம், ஏற்று மதிக் கடன் ரூ.921 கோடி, கல்விக்க டன் ரூ.62 கோடியே 55 லட்சம், வீட்டு  வசதிக்கு ரூ.230 கோடியே 72 லட்சம், மரபு சாரா எரிசக்தி துறைக்கு ரூ.225 கோடியே 91 லட்சம், சமுதாய கட்ட மைப்பு கடன் வசதி ரூ.27 கோடியே 67  லட்சத்து 50 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.55  ஆயிரத்து 599 கோடியே 80 லட்சத்து  95 ஆயிரம் என மதிப்பீடு செய்யப்பட் டுள்ளது. நபார்டு வங்கியின் இந்த மதிப்பீட்டு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு வருடாந்திர கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று மாவட்ட முன்னோடி வங்கியின் மேலா ளர் எஸ்.துர்காபிரசாத் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு வங்கி) இரா.ஷ்யாம்  ப்ரியா, மாவட்ட முன்னோடி அலுவலர்  (இந்திய ரிசர்வ் வங்கி) வம்சிதர் ரெட்டி,  மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா எஸ்.துர்கா பிரசாத், வங்கியாளர்கள் மற்றும் அரசு துறை அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.

மகளிர் உரிமைத் தொகை ரூ.5 ஆயிரம்: ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவை வரவேற்பு

திருப்பூர், பிப்.16- மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கிய  தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை  வரவேற்று நன்றி தெரிவித்துள்ளது.  இது குறித்து ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையின் தலைவர் அ.சு.பவுத்தன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள  செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் வறுமை  கோட்டுக்கு கீழே உள்ள 1 கோடியே 31 லட்சம் பெண்களுக்கு  மாதம் ரூபாய் ஆயிரம் வீதம் அவர்களது வங்கிக் கணக்கில்  மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கோடைகால சிறப்பு நிதி ரூ.2 ஆயிரம் மற்றும் மகளிர்  உரிமைத்தொகை மூன்று மாதத் தவணை என மொத்தம் ரூ.5  ஆயிரம் தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு வங்கி கணக்கில்  வரவு வைக்கப்பட்டுள்ளது ஒரு வரப்பிரசாதம் ஆகும். மேலும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.1000 கூடுத லாக அறிவித்து, மொத்தம் மாதம் மகளிர் உரிமைத் தொகை  ரூ.2 ஆயிரம் என அறிவித்தது, தமிழ்நாட்டு பெண்கள் மத்தி யில் மிகுந்த மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள் ளது.  குறிப்பாக இத்திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள  பட்டியலின பெண்கள் அதிக அளவில் பயன் பெற்று வருகின்ற னர். எனவே, இத்திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, மீண் டும் 2026 ஆம் ஆண்டு திமுக ஆட்சி தொடர துணை நிற்போம்,  என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.