தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

2 Apr 2026, 3:50 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

சேலம், ஏப். 2- கோடைக்கால கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகை யில், முக்கிய நகரங்களுக்கு இடையேயான சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஹைதராபாத் - கொல்லம் (07193/07194):  ஹைதராபாத் சிறப்பு ரயில் ஏப்ரல் 4 முதல் மே 23  வரை சனிக்கிழமைகளிலும், மறுமார்க்கமாக கொல் லம் சிறப்பு ரயில் ஏப்ரல் 6 முதல் மே 25 வரை திங்கட் கிழமைகளிலும் இயக்கப்படும். இவை சேலம், ஈரோடு,  திருப்பூர், போத்தனூர் வழியாகச் செல்லும். நீலகிரி மலை ரயில் கூடுதல் சேவை: சுற்றுலாப் பயணிகளின் வரவேற்பைத் தொடர்ந்து,  குன்னூர் - உதகமண்டலம் இடையே (06185/06186)  ஏப்ரல் 7 முதல் ஜூலை 2 வரை செவ்வாய், புதன் மற்றும்  வியாழக்கிழமைகளில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக் கப்படும். இவை வெல்லிங்டன், கேட்டி உள்ளிட்ட நிலை யங்களில் நின்று செல்லும். திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் (06030/06029): தென் மாவட்ட மக்களுக்காக இயக்கப்படும் இவ் வாரந்திர ரயில் ஜூன் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. தென்காசி, ராஜபாளையம், மதுரை, பழனி, பொள்ளாச்சி மற்றும் கோவை வழியாக 10  சேவைகள் வழங்கப்பட உள்ளன. இந்தச் சேவை நீட்டிப்பு சுற்றுலாப் பயணிகள் மற் றும் வெளியூர் பயணிகளுக்குப் பெரும் பயனுள்ள தாக அமையும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

திம்பம் மலைப்பாதையில் லாரி விபத்து

ஈரோடு, ஏப்.2- திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த  லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், அடர்ந்த வனப்பகுதியில் 27  கொண்டை ஊசி வளைவுகளுடன் திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக  தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகன  போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  கர்நாடகா மாநிலம், கனகபுரா பகுதியிலிருந்து இரும்பு  குழாய்கள் பாரம் ஏற்றிய லாரி கோவை செல்வதற்காக  திம்பம் மலைப்பாதை வழியாக புதனன்று சென்று கொண்டிருந்தது. சத்தியமங்கலத்தை சேர்ந்த பூபதி (22) என்பவர் லாரியை இயக்கியுள்ளார். சஞ்சய் (25) என்பவர் உடனிருந்தார். திம்பம் மலைப்பாதை 18 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வனப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத் தில் ஓட்டுநர் பூபதி, சஞ்சய் இருவரும் காயமடைந்த னர். இவ்விபத்து குறித்து ஆசனூர் காவல் துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மலை ரயில் பாதையில் முகாமிட்டிருந்த யானைகள்

உதகை, ஏப்.2- குன்னூரில் மலை ரயில் பாதையில் முகாமிட்டி ருந்த 11 யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக் குள் விரட்டினர். நீலகிரி மாவட்டம், குன்னூருக்கு கோவை மாவட் டம், மேட்டுப்பாளையத்திலிருந்து மலை ரயில் இயக் கப்படுகிறது. இந்நிலையில், சமவெளிப் பகுதிகளிலி ருந்து வந்த யானைகள் கூட்டமாக குன்னூர் பகுதியில்  முகாமிட்டுள்ளன. கோடை வறட்சியின் காரணமாக யானைகள் இப்பகுதிக்கு கூட்டமாக வருகின்றன. மேலும் யானைகளுக்கு தேவையான உணவு, தண் ணீர் இங்கு உள்ளதால் யானைகள் இப்பகுதிக்கு  தொடர்ந்து வருகின்றன.இந்நிலையில், குன்னூர்  ரன்னிமேடு மலை ரயில் பாதையில் உள்ள  தண்டவாளத்தில் 11 யானைகள் முகாமிட்டிருந்தது  புதனன்று தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து  அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப் பகுதிக்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து யானைகள் அங்கிருந்த ஆற்றை கடந்து வனப்பகுதிக்குள் சென்றன.

4 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் பறிமுதல் நாமக்கல், ஏப்.2- குமாரபாளையம் அருகே தேர்தல் விதிமுறை களை மீறி இரண்டு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற  4 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் பறக்கும் படையினர்  பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம் ஆர் எஸ் சாலை  பகுதியில் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய பொறி யாளர் தங்கராஜ் தலைமையிலான பறக்கும் படை பிரி வினர் வியாழனன்று வாகன கண்காணிப்பில் ஈடுபட்டி ருந்தனர். அப்பொழுது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், முறையான ஆவணங்கள் இன்றி 4 லட்சத்து 19  ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் வாகனத்தை ஒட்டி வந்தவர் கொக்கரையான் பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது யூசுப் என்பதும் இவர் தனது மைத் துனரின் மகன் திருமணத்திற்கு 4 லட்சத்து 19 ஆயி ரம் ரூபாய் தனது நிலத்தை விற்ற பணத்தை கொண்டு  சென்றதாகவும் தெரிவித்தார். இருப்பினும் முறை யான ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படை பிரி வினர் பணத்தை பறிமுதல் செய்து உரிய ஆவ ணங்கள் சமர்பித்து பணத்தை பெற்றுக் கொள்ள அறி வுறுத்தி அனுப்பி வைத்தனர். பறிமுதல் செய்த பணத்தை தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

ஆவணங்கள் இல்லாததால் ரூ.17 லட்சம் பறிமுதல் திருப்பூர், ஏப்.2 - திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாக னத்தில் எடுத்துவரப்பட்ட 17 லட்சத்து 60 ரூபாயை பறக்கும்  படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப் படைத்தனர். திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வள்ளி புரம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் துணை ராணுவத்தினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரின் கைப்பையை சோதனை செய்தனர். அப்போது  அவரிடம் இருந்த பையில் ரூ.17 லட்சம் இருப்பதாகவும், ஏடிஎம் எந்திரங்களில் பணம் நிரப்ப எடுத்து சென்றதாகவும் கூறியுள்ளார். ஆனால் அந்த பணத்திற்கு அவரிடம்  எந்த ஆவணமும் இல்லை. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் காங்க யம், சென்னிமலை ரோடு, நெய்காரம்பாளையத்தை சேர்ந்த  பார்த்தீபன் (31) என்பதும் அவர் ஏடிஎம் எந்திரங்களில் பணம்  நிரப்பும் தனியார் ஏஜென்சியில் பணியாற்றுவதும் தெரிய வந்தது. தொடர்ந்து அந்த பணத்தை அனுப்பர்பாளையம் முதல் மண்டல அலுவலகத்தில் இருந்த வடக்கு சட்ட மன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான, கோட்டாட்சி யர் சிவபிரகாசிடம் ஒப்படைத்தனர்.  தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் பணத்தை எண்ணிய போது அதில் ரூ.17 லட்சம் பணம்  இருந்தது தெரியவந்தது.  எனவே உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில்  ஒப்படைத்தனர்.

நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு தருமபுரி, ஏப்.2- தேர்தல் நடத்தை விதிகளை மீறிய தருமபுரி நாம் தமிழர்  கட்சி வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட் பாளராக தருமபுரி நகரை சேர்ந்த கே.சாந்தலட்சுமி அறி விக்கப்பட்டுள்ளார். இவர் தொகுதியில் பல்வேறு இடங்க ளில் வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில், அண்மை யில் அதியமான்கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் அமைந்துள்ள அதியமான் சிலைக்கு மலர் தூவி  மரியாதை செலுத்தினார். ஆனால், உரிய அனுமதி பெறாமல்  கட்சியினரோடு சென்று, அரசு வளாகத்தில் உள்ள சிலைக்கு  மலர்தூவி, தேர்தல் நன்னடத்தை விதிமீறியதாக, அவர்  மீது கிராம நிர்வாக அலுவலர் எல்.மாது காவல் நிலையத்தில்  புகாரளித்தார். அதன்பேரில், அவர் மீது அனுமதியின்றி அரசு  அலுவலக வளாகத்தில் நுழைதல், நடத்தை விதிமீறல் ஆகிய  பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருப்பூர் பின்னலாடைத் தொழில் கடும் நெருக்கடி  ஒரே மாதத்தில் நூல் விலை கிலோவுக்கு ரூ.22 உயர்வு!

திருப்பூர், ஏப்.2- பின்னலாடை உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் பருத்தி நூல்  விலை கிலோவுக்கு ரூ.10 அதிகரித் துள்ளது. திருப்பூர் பின்னலாடை உற் பத்திக்கு முதன்மையான மூலப் பொருளாக பருத்தி நூல் பயன்ப டுத்தப்பட்டு வருகிறது. நடப்பு பருத்தி ஆண்டில் இந்தியாவில் பருத்தி விளைச்சல் குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள் ளது. இதற்கேற்ப தற்போது சந்தைக்கு பருத்தி வரத்தும் குறைந் துள்ளது. தேவைக்கு ஏற்ப வரத்து  இல்லாத நிலையில், நூல் விலை  உயர்த்தப்பட்டு வருகிறது. தற் போது ஏப்ரல் 1ஆம் தேதி நூற் பாலைகள் பருத்தி நூல் விலையை  கிலோவுக்கு ரூ.10 அதிகரித்து அறி வித்துள்ளனர். ஏற்கனவே மார்ச் 15ஆம் தேதி  அளவில் பருத்தி நூல் விலை  கிலோவுக்கு ரூ.7 அதிகரிக்கப்பட் டது. அடுத்த 15 நாட்களில் பருத்தி  நூல் விலை மேலும் ரூ.15 அதி கரித்துள்ளது. ஒரு மாத காலத் திற்கு உள்ளாக கிலோவுக்கு ரூ.22  அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வையடுத்து ரக வாரி யாக ஒரு கிலோ நூல் விலை நில வரம் வருமாறு: செமி கோம்டு 10 ஆம் நம்பர் ரூ.268, 16ஆம் நம்பர்  ரூ.270, 20ஆம் நம்பர் ரூ.273, 25ஆம்  நம்பர் ரூ.278, 30ஆம் நம்பர் ரூ.283,  34ஆம் நம்பர் ரூ.291, 40ஆம் நம்பர் ரூ.309. அதேபோல் கோம்டு ரக நூல்கள் 20ஆம் நம்பர் ரூ.283, 25 ஆம் நம்பர் ரூ.288, 30ஆம் நம்பர்  ரூ.293, 34ஆம் நம்பர் ரூ.301, 40ஆம்  நம்பர் ரூ.319 என விற்பனை செய் யப்படுவதாக நூற்பாலைகள் தெரி வித்துள்ளன. நூல் விலை தொடர்ந்து உயர்ந் திருக்கும் நிலையில் ஏற்றுமதி பின்னலாடை தயாரிப்பாளர்கள் கவலையடைந்துள்ளனர். ஏற்கெ னவே திட்டமிடப்பட்ட ஆர்டர்களை  செய்வதற்கு நூல் கொள்முதல் செய்யும்போது முன்பு மதிப்பிடப் பட்டதை விட கூடுதல் விலை கொடுத்து நூல் வாங்க வேண்டியுள் ளது. கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து வரும் ஈரான் அமெரிக்க  போர் சூழலில் பல்வேறு உதிரி  பாகங்கள், பாலிஸ்டர் ஆகியவற் றின் விலைகள் சுமார் 40 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளன. இத்துடன் ஜாப் ஒர்க் கட்டணங்களும் சராசரி யாக 25 - 30 சதவிகிதம் உயர்ந்தி ருக்கின்றன. சரக்கு போக்குவரத் துக் கட்டணமும் அதிகரித்துள்ளது. பின்னலாடை உற்பத்திக்கு ஆதாரமான பருத்தி நூல் விலையும்  தற்போது உயர்ந்துள்ளதால் உற் பத்திச் செலவு கடுமையாக அதி கரிக்கும். மேலும் அடுத்த 15ஆம்  தேதியும் விலை உயர்வு இருக்கும்  எனக் கூறப்படுகிறது. இது பின்ன லாடை உற்பத்தித் தொழிலை கடு மையாக பாதிக்கும் என்று தொழில்  துறையினர் கூறுகின்றனர். மேலும் அறிவிக்கப்பட்டுள்ள விலைகளில் நூல் கிடைப்பதும் தட்டுப்பாடாக உள்ளது. நூல் விலை குறைவாக இருந்தபோது, நூலை கடனுக்கு வாங்கி பின்பு பணம் தருமாறு நூற்பாலைகள் கூறினர். தற்போது உடனடி பணம் மொத்தமாகக் கொடுத்தாலும் நூல்  கிடைக்கவில்லை. முன்பணம் கொடுத்து நூல் தேவையை பதிவு  செய்தாலும் ஒரு வாரம் வரை கால  தாமதம் ஆகிறது என்று தொழில் துறையினர் தெரிவித்தனர்.

நடக்க இருப்பவை

2026 சட்டமன்றத் தேர்தல் - சிறப்பு பேரவைக் கூட்டம் நாள்: 03.04.2026 வெள்ளிக்கிழமை  நேரம்: மாலை 5 மணி  இடம்: 9 ஆவது வீதி, கோவை மலையாளிகள் சமாஜம், காந்திபுரம், கோவை பங்கேற்போர் பெ.சண்முகம் சிபிஎம் மாநிலச் செயலாளர் ஏற்பாடு: கோவை மாவட்டக் குழு, சிபிஎம்

பரீட்சைக்குப்போனா பேனா எடுத்துட்டு போகணும்!

அவிநாசி, ஏப். 2- தேர்தல் களம் சூடுபிடித் துள்ள நிலையில், வேட்பா ளர்கள் தங்கள் பலத்தைக் காட்ட ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய் வது வழக்கம். ஆனால், அவிநாசியில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் செய்த காரியம், ’கொஞ்சம் எக்ஸ்ட்ரா’ பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. அவிநாசி தாலுகா அலுவலகத்திற்கு தொண்டர்களுடன் கெத்தாக வேட்பு மனு  தாக்கல் செய்ய வந்தார் தவெக வேட்பாளர் கமலி. ஐந்து நிர்வாகிகளுடன் தேர்தல் அதி காரியின் அறைக்குள் நுழைந்தார். அதி காரி, ”எங்கே மனுவை கொடுங்கள்” என்று  கேட்டபோதுதான் அந்த ‘பகீர்’ தருணம்  அரங்கேறியது. பையை தடவிப் பார்த்த  வேட்பாளர், திடீரென அதிர்ச்சியாகி, ”அய்யோ... மெயின் மேட்டரையே (மனுவை) வெளியே வெச்சுட்டு வந்துட் டேனே!” என அருகில் இருந்தவர்களிடம் கூறி கதிகலங்க வைத்துள்ளார். தேர்தலுக்கே ஆதாரமான வேட்பு மனுவை அலுவலக வாசலிலேயே விட்டு விட்டு வந்ததை அறிந்த நிர்வாகிகள், உடனே வெளியே ஓடிச் சென்று மனுவை தேடிப் பிடித்துக் கொண்டு வந்தனர். சுமார் அரை மணி நேரம் தாலுகா அலுவலகமே இந்தத் தேடுதல் வேட்டையால் கலகலப்பானது. ”பரீட்சைக்குப் பேனா எடுத்துட்டுப் போக மறந்த கதையா இருக்கே” என அங்கிருந்த அதிகாரிகள் முணுமுணுப்பதை கேட்க முடிந்தது.

தேர்தல் கெடுபிடி: கால்நடை விற்பனை மந்தம்

தருமபுரி, ஏப்.2- தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை வாகனச் சோதனை நடந்து வருவதால், காரி மங்கலம் வாரச்சந்தையில் கால்நடை விற் பனை மந்தமாக நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வாரச் சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வரு கின்றனர். அதன்படி செவ்வாயன்று கூடிய சந் தைக்கு 700 ஆடுகள், 600 மாடுகள் விற்ப னைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், ரூ.50 லட்சத்திற்கு ஆடுகளும், ரூ.45 லட்சத்திற்கு  மாடுகளும் விற்பனையானது. நாட்டுக்கோழி கள் விற்பனை ரூ.3 லட்சம் அளவில் இருந்தது.  மொத்தம் ரூ.98 லட்சத்திற்கு வர்த்தகம் நடந் தது. கடந்த சில வாரங்களாக, கால்நடை விற் பனை ரூ.2 கோடிக்கு மேல் நடந்து வந்த நிலை யில், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை கள் காரணமாக, வாகனச் சோதனை நடத்தப் பட்டு வருகிறது. இதனால் கால்நடை வியாபா ரிகள் வருகை குறைந்ததால், கால்நடை விற்பனை மந்தமாக இருந்ததென வியாபாரி கள் தெரிவித்தனர்.

ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் பறிமுதல்

தருமபுரி, ஏப்.2- உரிய ஆவணமில்லாமல் எடுத்துச் சென்ற ரூ.2.50 லட்சத்தை தேர்தல் பறக் கும் படையினர் பறிமுதல் செய்தனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தருமபுரி - மொரப்பூர் நெடுஞ்சாலை யில் பறக்கும்படை அலுவலர் ஏ.நித்யா தலைமையிலான குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், போளை யம்பள்ளி கிராமத்தை சேர்ந்த பிரபு (39) என்பவர், உரிய ஆவணம் இல்லா மல் ரூ. 2.50 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், தேர்தல் நடத்தும் அலுவலர் பெ.கி.கோவிந்தனிடம் ஒப்படைத்தனர்.  இதேபோன்று, பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் தேவராஜ் என்பவர், கேரளம் மாநிலத்தில் மரங் கள் எடுப்பதற்காக சென்றார். நீல கிரி - கர்நாடக எல்லையிலுள்ள கக்க னல்லா சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்ட போது, தேவராஜிடம் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 22 லட்சத்து 82 ஆயிரம் ரூபாயை பறி முதல் செய்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.