தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பழைய பேருந்து நிலையம் வரை நகரப் பேருந்துகள் நீட்டிப்பு கள்ளக்குறிச்சியில் வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ அறிவிப்பு

14 Feb 2026, 4:33 pm
பழைய பேருந்து நிலையம் வரை நகரப் பேருந்துகள் நீட்டிப்பு  கள்ளக்குறிச்சியில் வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ அறிவிப்பு
<p><strong>பழைய பேருந்து நிலையம் வரை நகரப் பேருந்துகள் நீட்டிப்பு &nbsp;கள்ளக்குறிச்சியில் வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ அறிவிப்பு</strong></p> <p>கள்ளக்குறிச்சி, பிப். 14 கள்ளக்குறிச்சியில் புதிய புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, நகருக்குள் வரும் பொது மக்களின் வசதிக்காக அனைத்து நகரப் பேருந்துகளும் பழைய பேருந்து நிலையம் வரை இயக்கப்படும் என திமுக மாவட்டச் செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் தெரி வித்துள்ளார். பொதுமக்கள் கோரிக்கை புதிய பேருந்து நிலையம் நகருக்கு வெளியே அமைந்துள்ளதால், பழைய பேருந்து நிலையத்திற்குப் போதிய பேருந்து கள் இல்லாத நிலை இருந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சந்தித்த சிரமங்களைச் சுட்டிக்காட்டி, பேருந்து சேவையை நீட்டிக்கக் கோரிக்கை விடுத்த னர். இது தொடர்பாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரு டன் ஆலோசிக்கப்பட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேவை விவரங்கள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த 116 நகரப் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் இனி பழைய பேருந்து நிலையம் வரை வந்து செல்லும். குறிப்பாகச் சின்னசேலம், தியாகதுருகம், கூத்தக்குடி, திருக்கோவிலூர் ஆகிய பகுதி களிலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையம் வரை நீட்டிக் கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாளொன்றுக்கு &nbsp;மொத்தம் 880 நடைகள் &nbsp;பழைய பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படும். இதில் அவைத் தலைவர் ராமமூர்த்தி நகர மன்ற வடக்கு மாவட்ட துணைச் செயலா ளர் வாணியந்தல் ஆறுமுகம், &nbsp; தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் காமராஜ் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.என்.டி.முருகன்,நகர மன்ற தலைவர் சுப்ராயலு,ஆணையர் சரவணன் மாவட்ட மாவட்ட பிரதிநிதி சத்யா முருகன் மாவட்ட கவுன்சிலர் முருகேசன் நகர துணைச் செய லாளர் அப்துல் ரசாக் நீலமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்பின் பிரதி நிதிகள் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது நகர்மன்றத் தலைவர் சுப்ராயலு, ஆணையர் சரவணன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.