திருப்பதி அருகே பாய்லர் வெடித்து விபத்து 4 பேர் பலி!
3 Oct 2026, 9:58 pm

திருப்பதி அருகே பாய்லர் வெடித்து விபத்து 4 பேர் பலி!

ஆந்திரா - தமிழக எல்லையான தடா நகரில் (திருப்பதி அருகே) அமைந்துள்ளது. ஸ்ரீசிட்டி பொருளாதார மண்டலம். இங்குள்ளபிரபல மருந்தகத் தொழிற்சாலையில் சனிக்கிழமை காலை நீர் நிரம்பிய பாய்லர் திடீரென வெடித்துச் சிதறியது. பாய்லர் வெடித்த வேகத்தில் கட்டிடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்ததில், அங்கு வேலை செய்துகொண்டிருந்த 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ளமருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்குச் சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்ததை அடுத்து,பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.