தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கன்னியாகுமரி தொகுதியில் பறக்கும் படை வாகன சோதனையை செலவின பார்வையாளர் நேரில் ஆய்வு

30 Mar 2026, 3:40 pm
கன்னியாகுமரி தொகுதியில் பறக்கும் படை வாகன சோதனையை செலவின பார்வையாளர் நேரில் ஆய்வு

கன்னியாகுமரி தொகுதியில் பறக்கும் படை வாகன சோதனையை செலவின பார்வையாளர் நேரில் ஆய்வு

நாகர்கோவில், மார்ச். 30 சன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆணைப்பாலம் பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு படையினர் வாகனசோதனையில் ஈடுபட்டு வருவதை நாகர்கோவில் மற்றும் குளச்சல் சட்டமன்றதொகுதி செல வினபார்வையாளர் சரண் ஜோஸ், ஆய்வு நடத்தினார். இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்திற் குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிக ளுக்கு வரும் ஏப்ரல் 23 அன்று பொ துத்தேர்தல் நடைபெறுவதை யொட்டி பல்வேறு முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்ஒருபகுதியாக கன்னி யாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆணைப்பாலம் பகுதியில் பறக்கும்  படையினர் வாகன சோதனையில் ஈட்டுபட்டுவருவதை நாகர்கோவில் மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதி செலவின பார்வையாளர் சரண் ஜோஸ், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரி விக்கையில்,தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலை யில், கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி சட்டமன்ற தொகு திக்குட்பட்ட ஆணைப்பாலம் பகுதி யில் வாகன சோதனையில் பறக்கும் படையினர் ஈடுப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாகனங்களை நிறுத்தி சோத னை செய்யும் விதம், ஆவணங்க ளைச் சரிபார்த்தல் மற்றும் வீடியோ பதிவு செய்யப்படுவது உள்ளிட்ட வைகள் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. சோதனையின் போது கைப் பற்றப்படும் பொருட்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய பணப் புழக்கம் குறித்து பராமரிக்கப்படும் பதிவே டுகள் ஆய்வு மேற்கொண்டு, சரி யான முறையில் பராமரிக்க அலு வலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், அதே சமயம் தேர்தல் விதிமீறல்கள் நடைபெறாத வண்ணமும் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.  இவ்வாறு நாகர்கோவில் மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதி செலவின பார்வையாளர் தெரி வித்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக நாகர்கோவில் வரு வாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்யப்படு வதைநேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.