அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
12 Apr 2026, 5:30 am

அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வரும் கல்வி ஆண்டு முதல் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான முதற்கட்டப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் சுமார் 15 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.