“உடல்நிலை பாதித்த ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்களித்திடுக”
27 Mar 2026, 3:15 pm
<p><strong>“உடல்நிலை பாதித்த ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்களித்திடுக” </strong></p>
<p>சிவகங்கை, மார்ச் 27- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ், மாவட்டத் தலைவர் புரட்சித்தம்பி, மாவட்டச் செயலாளர் சகாய தைனேஸ், சிவகங்கை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பொற்கொடியின் நேரடி உதவியாளர் விஜயகுமாரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்ற வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் தொகுதி மாற்றி பணி வழங்கு வதால் சுமார் 100 கி.மீட்டருக்கு அப்பால் பணிக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே அந்தந்த பகுதிகளிலேயே தேர்தல் பணி வழங்க வேண்டும். மண்டல அலுவலர்கள் மூலம் ஆசிரியர்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு அழைத்து செல்ல உரிய பேருந்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். தேர்தல் பணியிலிருந்து தேர்தல் ஆணையத்தால் விலக்களிக்க உறுதியளிக்கப்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், கடுமையான நோயால் பாதிக்கப் பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டோர், மருத்துவ விடுப்பில் உள்ளோர் மற்றும் தேர்தல் பணியாற்ற இயலாத நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
