நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆய்வு
13 Mar 2026, 4:52 pm
<p><strong>நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆய்வு</strong></p>
<p>மயிலாடுதுறை, மார்ச் 13- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் பணிகள் மற்றும் நெல் மூட்டைகள் நகர்வு பணிகள் தொடர்பாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் ஆ. அண்ணாதுரை தலைமையில், மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் திருவிளையாட்டம் கிராமத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையம், மன்னம்பந்தல் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம், பெருஞ்சேரி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையம் ஆகிய இடங்களில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் நடைபெற்று வரும் நெல் கொள்முதல் பணிகள் மற்றும் நெல்மூட்டை நகர்வுப் பணிகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் ஆர். அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p>
