10 ஆண்டுகள் சிறை ; ரூ.10 கோடி வரை அபராதம்
24 Jul 2026, 9:11 pm
<p><strong>10 ஆண்டுகள் சிறை ; ரூ.10 கோடி வரை அபராதம்</strong></p><p>புதுதில்லி நாடு முழுவதும் மோடி அரசுக்கு எதி ராக போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலை யில், வெள்ளியன்று பிரதமர் மோடி தலைமை யில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில், தேர்வு முறைகேடு களைத் தடுப்பதற்கான ‘பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளை தடுத்தல்) சட்டம் 2024’-ல் கடுமையான திருத்தங்களை மேற் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி, குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிக பட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்ட னையும், ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது என ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறினார். மோடி முன்னதாக, வியாழனன்று நள்ளிரவு பிரத மர் மோடி வெளியிட்ட செல்பி வீடியோவில், “விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமை யான தண்டனைகளுக்கான விதிகளை உள்ளடக்கிய வரைவுச் சட்டத்தைத் தயா ரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். திங்கள்கிழமை இந்த மசோதாவை இரு அவைகளிலும் விரைவாக நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப் படும்” என்று அவர் கூறினார்.</p>
