முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்பு
1 Nov 2026, 9:36 pm
<p><strong>முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்பு</strong></p><p>வாக்கு திருட்டை கண்டித்து ராம் லீலா மைதானம் நோக்கி நடைபெற்ற பேரணியில் முன்னாள் ராணுவ வீரர்களும் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான முன் னாள் ராணுவ வீரர்களை பதாகைகளுடன் மோடி அரசு மற்றும் தலைமை தேர் தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பேரணியில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர்களில் பலர் மாற்றுத் திறனாளிகள் (போரின் போது காயம்) ஆவர். சக்கர நாற்காலி மற்றும் கையில் தடிகளை ஊன்றி பேரணியில் கம்பீரமாக பேரணியில் பங்கேற்றனர். கன்னாட் பிளேஸ் அருகே பேரணியில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர் கூறுகையில்,”முன்பு நாட் டிற்காக எல்லையில் போராடினோம். ஆனால் இன்று நாட்டின் ஜனநாயகத்தை காக்க தலைநகரில் போராடுகிறோம்” என்று பேசினார். </p>
