மெட்ராஸ் முதல் நவீன சென்னை வரை மாறிவரும் உணவுப்பண்பாடு
1 hour before

மெட்ராஸ் முதல் நவீன சென்னை வரை மாறிவரும் உணவுப்பண்பாடு

சென்னை, ஆக.24-வீட்டில் சமைத்த உணவை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டிபன் பாக்ஸில் எடுத்துச் செல்லும் வழக்கம் மாறி,இன்று ரெஸ்டாரண்டுகள், கஃபேக்கள் மற்றும் ஆன்லைன் உணவு டெலிவரிசெயலிகள் சென்னையின் அடையாளமாக மாறிவிட்டன. காலத்திற்கேற்ப சென்னையின் உணவுப் பண்பாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் குறித்துஉணவு வரலாற்றாசிரியர்கள் நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர்.

எழுத்தாளர் சிவசங்கரி (82), 1960மற்றும் 70-களின் மெட்ராஸில் அண்ணா சாலையில் இருந்த 'கேலார்ட்' மற்றும் 'ஜாபர்ஸ்' ஐஸ்கிரீம்கள் சர்வதேச தரத்தில் இருந்ததையும், அங்குதனது விருப்பமான 'பீச் மெல்பா' உண்பதையும் நினைவு கூருகிறார். உணவு நூலாசிரியர் சபிதா ராதாகிருஷ்ணா கூறுகையில், அன்றையகாலத்தில் வெளியில் சாப்பிடுவது அரிதான ஒன்றாகவும், குடும்பத்தினருடன் புஹாரி, உட்லன்ஸ் டிரைவ்-இன் மற்றும்சாந்தி விஹார் போன்ற இடங்களுக்குச்செல்வது வழக்கமாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.உணவு வரலாற்றாசிரியர் ராகேஷ் ரகுநாதன் கூறுகையில், முன்பு காலையில் பெரிய உணவு வேளையும், மாலையில் சிற்றுண்டியும் உட்கொள்ளும் பழக்கம் இருந்ததாகவும், ஏவிஎம் தசா மற்றும் மதுரா போன்ற இடங்களுக்கு விசேஷ நாட்களில்மட்டுமே சென்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்கால தமிழ் இலக்கியக் குரல்களில் ஒன்றான எழுத்தாளர் கரண் கார்க்கி, 2000-ம் ஆண்டிற்குப் பிறகு பெருநகர மால்கள் மற்றும் உணவுத்திருவிழாக்களால் சென்னையின் உணவுச் சூழல் முற்றிலும் மாறியதாகக் கூறுகிறார். ஓட்டேரி தஷாமகன் பகுதிமலிவான தெருவகை உணவுகள் மற்றும் பிரியாணிக்கு பிரபலமாக உள்ளதாகவும், மெரினா லூப் ரோடு கடல் உணவுகளுக்கு பெயர் பெற்றதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.மேலும், தெற்கு சென்னையில் பிரியாணி என்பது பிரத்யேக உணவிலிருந்து மாறி அன்றாட உணவாகிவிட்டதாகவும், அண்ணாநகர் பகுதி இரவு நேர உணவு மையமாகவும், மேற்கு மாம்பலம் மலிவான வீட்டுமுறைசைவ உணவுகளுக்கும் பெயர் பெற்று விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.