பொலிவியா முன்னாள் ஜனாதிபதி: ஈவோ மொரேல்ஸையும் கடத்த அமெரிக்க சதித்திட்டம்!
18 May 2026, 9:09 pm

பொலிவியா முன்னாள் ஜனாதிபதி: ஈவோ மொரேல்ஸையும் கடத்த அமெரிக்க சதித்திட்டம்!

லா பாஸ், மே 18 - வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுராவை கடத்தியது போல பொலிவியாவின் முன்னாள் ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸையும் கடத்துவதற்கு அமெரிக்கா சதித் திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.

“என்னைக் கைது செய்வதற்கும், கொலை செய்வதற்கும் ரோட்ரிகோ பாஸின் தலைமையிலான தற்போதைய பொலிவிய அரசுக்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் தெற்கு ராணுவப் பிரிவு (U.S. Southern Command) மற்றும் போதைப்பொருள் அமலாக்க நிர்வாகம் இந்த சதித்திட்டத்தின் பின் உள்ளன என முன்னாள் ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸை குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர்களான கார்லோஸ் “ஸோரோ” சான்செஸ் பெர்சாய்ன், எர்னஸ்டோ ஜஸ்டினியானோ ஆகியோருக்கும் இந்த சதித் திட்டத்தில் நேரடித் தொடர்பு இருப்பதாக இவோ மொரேல்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.