முந்தய பக்கம்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் தாராபுரத்திற்கு அனுப்பி வைப்பு

24 Sept 2026, 1:49 am
வாக்குப்பதிவு இயந்திரங்கள் தாராபுரத்திற்கு அனுப்பி வைப்பு
<p><strong>வாக்குப்பதிவு இயந்திரங்கள் தாராபுரத்திற்கு அனுப்பி வைப்பு</strong></p><p>திருப்பூர், செப்.23 -தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் 22 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பூரில் இருந்து அங்கு அனுப்பி வைக்கப்பட்டனதாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தலுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இ.வி.எம். மற்றும் வி.வி.பேட் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் பார்வையிட்டார்.வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்காக 320 வாக்குச்சாவடி மையங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ள 384 வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்க்கப்பட்டு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தாராபுரம் இடைத்தேர்தலில் 22 பேர் போட்டியிடுவதால், அங்குள்ள வாக்கு சாவடிகளில் 2 பேலட் சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் கூடுதலாக 380 பேலட் சீட்டுகள் புதனன்று அனுப்பி வைக்கப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram