தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்: ராகுல் காந்தி

13 Jan 2026, 3:17 pm
ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்: ராகுல் காந்தி
<p><strong>ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்: ராகுல் காந்தி</strong></p> <p>உதகை, ஜன.13- ஒருவருக்கொருவர் அன்பாக இருக்கும், ஒருவருக்கொருவரின் குரலுக்கு செவிசாய்க்கும், ஒருவ ருக்கொருவர் மதிக்கும் ஒரு இந்தியாவை உருவாக்க, ஜனநாய கத்தை பாதுகாக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என கூட லூரில் நடந்த விழாவில் பங்கேற்ற &nbsp;நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் &nbsp;ராகுல்காந்தி தெரிவித்தார். நீலகிரி மாவட்டம், கூடலூரி லுள்ள புனித தாமஸ் பள்ளியின் பொன் விழா செவ்வாயன்று நடை பெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலை வரும், நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி, பழங் குடியினருடன் பொங்கல் வைத்து நடனமாடி மகிழ்ந்தார். &nbsp;அதன்பின் அவர் பேசுகையில், &nbsp;இன்று நாம் தகவல் தொழில்நுட்பம் &nbsp;மற்றும் செயற்கை நுண்ணறிவு காலத்தில் வாழ்ந்து வருகிறோம். அது குறித்து முழுமையாக அறியா மல் உள்ளோம். தகவல் உண்மை யில் கிடைக்கக்கூடியதாகவும் அணுகக்கூடியதாகவும் இருக்கி றது. பள்ளிகளின் வேலை என்ன வென்றால், தகவலை அறிவாக &nbsp;மாற்றுபவர்களை உருவாக்குவது தான். என் 20 வருட அனுபவத்தில் &nbsp;நான் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன். &nbsp;நீங்கள் விரும்புவதை செய்யுங் கள், சிறப்பாகச் செய்யுங்கள். நீங் கள் எதை விரும்பினாலும் அதில் சிறந்து விளங்குங்கள், உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருங் கள், என்றார். மேலும், இந்தியா ஒரு ஜனநா யக நாடு. ஆனால், இன்று நமது ஜனநாயக அமைப்பு அச்சுறுத்த லுக்குள்ளாகியுள்ளது. ஜனநாய கத்தை பாதுகாக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். நாட்டை &nbsp;ஆள்பவர்கள், நமது தேர்தல் ஆணையம், நமது பல்வேறு நிறு வனங்கள் அனைத்தையும் தங்கள் &nbsp;கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள் கிறார்கள். அவர்களது கொள்கை களை ஏற்றகாத அனைத்து அமைப்புகள் மீது தாக்குதல் நடக் கிறது. இந்தியாவில் பலவிதமான &nbsp;மதங்கள், கலாச்சாரங்கள், மொழி கள் உள்ளன. ஒரு மதத்தை தேர்ந் தெடுப்பதற்கு உங்களுக்கு முழு &nbsp;உரிமை உண்டு. அவர்கள் பேசும் &nbsp;மொழி உங்களுக்கு பிடிக்க வில்லை என்பதற்காக ஒருவரை தாக்குவதற்கோ அல்லது ஒரு &nbsp;மதத்தை உங்களுக்குப் பிடிக்க வில்லை என்பதற்காக ஒருவரை &nbsp;தாக்குவதற்கோ உங்களுக்கு உரிமை இல்லை. ஆனால், வளர்ச் சிக்காக நமது சுற்றுச்சூழலை தியாகம் செய்யக்கூடாது. இந்த &nbsp;ஆரவல்லி போன்ற விஷயங்கள் முற்றிலும் பொறுப்பற்ற செயல். &nbsp;நமக்கு சமநிலை தேவை. மேலும், நாம் நமது சுற்றுச்சூழலுக்கு மிக வும் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் வளர்ச்சி இருக்க வேண்டும், என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.