தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கடல் நீரிலும் உப்பு இருக்கும்!

6 Mar 2026, 2:41 pm
கடல் நீரிலும் உப்பு இருக்கும்!

கடல் நீரிலும் உப்பு இருக்கும்!

சர்வதேச கடல்சார் சட்டங்களையும், அண்டை நாடுகளின் இறையாண்மையையும் கிஞ்சித்தும் மதிக்காமல், இலங்கை அருகே ஈரான் கடற்படைக் கப்பல் மீது அமெரிக்கா நடத்தியுள்ள காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் ‘மிலன் 2026’ கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு, இந்தியக் கடற்படையின் விருந்தினராகத் திரும்பிக்கொண்டிருந்த ‘ஐஆர்ஐஎஸ் தேனா’ போர்க்கப்பலை, காலி  கடல் பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் திட்டமிட்டுத் தாக்கி மூழ்கடித்திருப்பது ஒட்டு மொத்த ஆசியாவிற்கே விடப்பட்ட சவாலாகும்.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமை யிலான இந்திய அரசின் அணுகுமுறை கடும் கண்டனத்திற்குரியது. இந்தியாவுடன் பல்லாண்டுகளாக பொருளாதார மற்றும் கலாச் சார உறவுகளைக் கொண்ட ஈரான் நாட்டின் உயர் மட்டத் தலைவர் அலி காமேனி படுகொலை செய் யப்பட்டபோது, நான்கு நாட்களாக மௌனம் காத்தது மோடி அரசு. எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்குப் பிறகும், சர்வதேச அழுத்தம் அதிகரித்த பிறகும், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியை ஈரான் தூதரகத்திற்கு அனுப்பி இரங்கல் குறிப்பில் கையெழுத்திட்டது வெறும் கண்துடைப்பு நாடகமே தவிர வேறில்லை.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இத்தகைய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போக்கை வெளிப் படையாகக் கண்டிக்க இந்திய அரசு அஞ்சுவது ஏன்? நமது நாட்டின் அழைப்பை ஏற்று வந்த ஒரு நட்பு நாட்டு வீரர்களின் ரத்தம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சிந்தப்பட்ட பிறகும், இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்காவின் பெயரைக் கூடக் குறிப்பிடத் துணிவில்லாதது வேதனையானது. 130 மாலுமி கள் பயணித்த ஒரு கப்பல், இந்தியாவிற்கு மிக அருகில் பாதுகாப்பான கடல் எல்லையில் தாக்கப்பட்டிருப்பது இந்தியாவின் பாதுகாப்புத் திறனையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

தன்னுடைய எல்லையிலேயே ஒரு நட்பு நாட்டு வீரர்களின் உயிர்கள் பறிக்கப்பட்ட பிறகும், குற்றவாளியின் பெயரைச் சொல்ல அஞ்சும் இந்த ‘வளைந்து கொடுக்கும்’ வெளி யுறவுப் போக்கு, எதிர்காலத்தில் இந்தியாவிற்கே வினையாக முடியும். இனியும் மௌனம் காக்கா மல், அமெரிக்காவின் இந்த அராஜகத்தை இந்தியா சர்வதேச மேடைகளில் உரக்கக் கண்டிக்க வேண்டும். இல்லையெனில், இந்தியப் பெருங்கடல் பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லை, மாறாக அமெரிக்காவின் வேட்டைக் காடாக மாறிவிட்டது என்ற கறை அழியாமல் நிலைத்துவிடும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.