தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெப்ப அலைக்கு ஐரோப்பாவில் 14,000 பேர் உயிரிழப்பு! உலகின் நிகழ்கால ஆபத்தாக மாறியது காலநிலைப் பேரிடர்!

18 Jul 2026, 9:03 pm
வெப்ப அலைக்கு ஐரோப்பாவில் 14,000 பேர் உயிரிழப்பு! உலகின் நிகழ்கால ஆபத்தாக  மாறியது காலநிலைப் பேரிடர்!

வெப்ப அலைக்கு ஐரோப்பாவில் 14,000 பேர் உயிரிழப்பு! உலகின் நிகழ்கால ஆபத்தாக மாறியது காலநிலைப் பேரிடர்!

ஜெனீவா, ஜூலை 18 - ஐரோப்பாவில் வீசிய வரலாறு காணாத தீவிர வெப்ப அலை காரணமாக, 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரி ழந்துள்ளதாக அதிர்ச்சிகரமான ஆய்வுகள் வெளி வந்துள்ளன.

இந்தச் சம்பவங்கள், காலநிலை நெருக்கடி என்பது எதிர்கால அச்சுறுத்தல் அல்ல, அது நிகழ்கால ஆபத்து என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன. புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டின் காரணமாக உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதிப்பு கடுமையாக தீவிரமடைந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஜூன் 18 முதல் ஜூலை 1 வரை நீடித்த வெப்ப அலை காரணமாக பல நாடுகளின் வெப்ப நிலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

‘பொலிடிகோ’ (POLITICO) நிறுவனம் நடத்திய ஆய்வில், வெப்ப அலை வீசிய காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் சாதாரண நாட்களில் ஏற்பட்டதை விட கூடுதல் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அதிகபட்சமாக ஜெர்மனியில் 6,800 பேரும் பிரிட்டனில் சுமார் 2,200 பேரும் பலியாகியுள்ளனர்.

அதீத வெப்பமானது, மனிதர்களுக்கு வெப்பவாதத்தை (Heat stroke) ஏற்படுத்துகிறது; பலருக்கு ஏற்கெனவே உள்ள உடல்நலக் குறைபாடுகளைத் தீவிரப்படுத்துகிறது; இது மரணத்திற்கு வழிவகுக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் தரவுப்படி, ஜூன் 22 முதல் 28 வரை மட்டும் 10 ஆயிரத்து 650 கூடுதல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி மிதமான காலநிலை நிலவும் நாடுகள் ஆகும். இங்கும் ஜூன் மாத வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட மிக அதிகமாக இருந்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை விட அதிகமாக பதிவாகியுள்ளது. 2,025 பேர் பலியாகியுள்ளனர். பெரும்பாலானோர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என கூறப்படுகிறது.

கிரீஸில் நிலவிய அதீத வெப்பம் காரணமாக பல சுற்றுலாப் பயணிகள் காடுகளிலும் மலைப் பாதைகளிலும் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகமும் அரங்கேறியுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘கோப்பர்நிகஸ் பருவநிலை மாற்றக் கண்காணிப்பு அமைப்பு’ மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை விடுத்துள்ள கூட்டு எச்சரிக்கையில், உலக வெப்பமயமாதல் காரணமாக ஐரோப்பியக் கண்டம் மற்ற கண்டங்களை விட இரண்டு மடங்கு அதிவேகமாக வெப்பமடைந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடுகள் தங்களின் உள்கட்டமைப்பை மாற்றி அமைக்காவிட்டால் மற்றும் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தாவிட்டால், ஒவ்வொரு ஆண்டும் வெப்ப அலையால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.