தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எத்தனால் கலப்பு: அவசரக் கோலத்தில் அதிகார ஆணவம்!

17 Jul 2026, 7:43 pm
எத்தனால் கலப்பு: அவசரக் கோலத்தில் அதிகார ஆணவம்!

எத்தனால் கலப்பு: அவசரக் கோலத்தில் அதிகார ஆணவம்!

இந்தியாவின் எரிபொருள் தேவையை எதிர்கொள்ளவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும் என்ற பெயரில் ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள எத்தனால் கலப்பு (இ20) திட்டம், தற்போது களத்தில் பெரும் குழப்பத்தை யும், வாகன உரிமையாளர்களுக்கு அச்சத்தை யும் ஏற்படுத்தியுள்ளது. போராட்டங்கள் ஒரு புறம் இருக்க, பெட்ரோல் நிலையங்களில் எத்த னால் கலந்த பெட்ரோல் என்ற பெயரில் வாக னங்கள் பழுதாகும் அவலநிலை பெட்ரோல் டீலர்களின் குற்றச்சாட்டு மூலம் வெளிச் சத்திற்கு வந்துள்ளது.

எத்தனால் இயற்கையிலேயே ஈரப்பதத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. தற்போதுள்ள பெட்ரோல் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் நிலத்த டித் தொட்டிகள், எத்தனால் கலப்புக்குத் தயாராக இல்லாத நிலையில், மழைக்காலங்களிலும் கடலோரப் பகுதிகளிலும் இந்த எரிபொருள் தண்ணீருடன் கலந்து ‘கழிவு’ போல மாறுவதாக டீலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். “தண்ணீ ரும் எத்தனாலும் கலந்து கீழே தங்க, மேல டுக்குகளில் மட்டும் பெட்ரோல் மிதக்கும்” இந்த வேதியியல் வினையால், வாடிக்கையா ளர்களின் வாகனங்களுக்குச் சேதம் விளைவது தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.

ஒன்றிய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரிக்கு அதிகமான சர்க் கரை ஆலைகள் உள்ளன. அவர் உள்ளிட்ட சர்க்கரை பெரு முதலாளிகள் பயனடைய வேண்டும் என்பதற்காக, சர்க்கரை ஆலை களின் உற்பத்திப் பொருளான எத்தனாலை இப்படி திருப்பிவிட்டு லாபம் பார்க்கவே இத் திட்டம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்தப் பாதிப்புகளுக்கான நிதிச் சுமையைச் சிறு பெட்ரோல் நிலைய உரிமையா ளர்கள் சுமக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது நியாயமற்றது. அரசின் திட்டத்தை செயல் படுத்தும் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள், எவ்விதப் பாதுகாப்பும் இன்றி, நஷ்டத்தையும் பழிச்சொற்களையும் சுமக்க வேண்டியுள்ளது.

தொழில்நுட்ப ரீதியான கட்டமைப்பு வசதிக ளைச் சரிசெய்யாமல், அவசர அவசரமாக ‘இ 20’ திட்டத்தைத் திணிப்பதும், அதைச் சுட்டிக்காட்டு பவர்களை மிரட்டுவதும் கண்டிக்கத்தக்கது. “தண்ணீர் கலந்து வருகிறது” என்று புகாரளிக் கும் வாகன ஓட்டிகளை, ஏதோ குற்றவாளிகளைப் போல எப்ஐஆர் பதிந்து ஒடுக்கும் போக்கு, அரசின் தோல்வியையே பறைசாற்றுகிறது.

ஒன்றிய அரசு, தன் பிடிவாதத்தைக் கைவிட்டு, பெட்ரோல் நிலைய உரிமையாளர்க ளின் கோரிக்கையைக் கேட்டு, நிலத்தடித் தொட் டிகளை நவீனப்படுத்துவதற்கும், எரிபொருள் தரத்தைக் காப்பதற்கும் உரிய முதலீடுகளைச் செய்ய வேண்டும். தொழில்நுட்பக் குளறுபடி களைத் தீர்க்காமல், மக்களைக் கசக்கிப் பிழிவது ஒருபோதும் நீண்டகாலத் தீர்வாகாது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.