முந்தய பக்கம்

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது எத்தலப்பர் மணிமண்டபம்!

8 Jan 2026, 2:44 pm
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது எத்தலப்பர் மணிமண்டபம்!
<p><strong>பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது எத்தலப்பர் மணிமண்டபம்!</strong></p> <p>உடுமலை, ஜனவரி 8 - தீக்கதிர் நாளிதழ் செய்தியின் எதிரொலியாக, எத்தலப்பர் &nbsp;மணிமண்டபம் பொது மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எத்தலப்பர் மணிமண்டபம் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட வேண்டும், அச்சிலை அருகே செம்மொழிப் &nbsp;பூங்கா அமைக்க வேண்டும் என தீக்கதிர் நாளிதழில் &nbsp;தொடர்ச்சியாக செய்தி வெளியிடப்பட்டது. &nbsp;சுதந்தரப் போராட்ட வீரரும், தளி பாளையக்காரருமான எத்தலப்பர் நாயக்கருக்கு, திருமூர்த்தி மலையில் மணிமண் டபமும், உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் சிலை யும் தமிழக அரசால் நிறுவப்பட்டது. எனினும், திருமூர்த்தி மலையிலுள்ள மணிமண்டபம் பொது மக்களால் பயன்ப டுத்த முடியாத நிலையில் இருந்தது. மேலும், சிலை அமைந் துள்ள இடம் வாகனம் நிறுத்தும் இடமாகப் பயன்படுத்தப் பட்டு வந்தது. திருமூர்த்தி மலையில் எத்தலப்பர் நாயக்கருக் காகக் கட்டப்பட்ட மணிமண்டபம் திறக்கப்பட்ட போதிலும், &nbsp;மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வராமல், ஓராண்டுக்கும் &nbsp;மேலாக பூட்டி வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து கடந்த &nbsp;டிசம்பர் 21 ஆம் தேதி தீக்கதிரில் செய்தி வெளியிடப்பட்டது. இந்தச் செய்தியின் எதிரொலியாக, மணிமண்டபம் இப் போது தளி பேரூராட்சி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொது மக்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் &nbsp;எனும் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram