சாய்ராம் கல்வி நிறுவனத்தில் தலைமைத்துவத்திற்கான இஎஸ்ஜி உச்சிமாநாடு
31 Mar 2026, 4:50 pm
<p><strong>சாய்ராம் கல்வி நிறுவனத்தில் தலைமைத்துவத்திற்கான இஎஸ்ஜி உச்சிமாநாடு</strong></p>
<p>சென்னை, மார்ச் 31- சாய்ராம் கல்வி நிறு வனத்தில் தலைமைத்துவத் திற்கான சுற்றுச்சூழல், சமூ கம் மற்றும் நிர்வாகம் (இ எஸ்ஜி) உச்சிமாநாடு அண் மையில் நடைபெற்றது. இதுகுறித்து கல்விக் குழுமத்தின் தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து கூறுகையில், ஐக்கிய நாடுகளின் குளோபல் காம்பாக்ட் நெட்வொர்க் இந்தியா அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த உச்சிமாநாட்டில், ஐக்கிய நாடுகள் உலக ளாவிய ஒப்பந்த வலை யமைப்பு இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ரத்னேஷ் ஜா, நிலைத்தன்மைக்கான உலகளாவிய தலைவர் மற்றும் இணைச் செய லாளர் அபிஷேக் ரஞ்சன், துணை இயக்குநர் டாக்டர் சோம்நாத் சிங், துணைத் தலைவர் (மேற்கு) சஞ்சீவ் குமார் வர்மா ஆகியோர் கருத்துரை வழங்கினர். இது அடுத்த தலை முறைக்கு ஊக்கமளிப்ப தற்கும், சிறந்த எதிர் காலத்தை வடிவமைக்க அர்த்தமுள்ள வகையில் ஒன்றிணைந்து செயல் படுவதற்குமான ஒரு நிகழ்ச்சியாகும் என்று கூறிய அவர் உண்மையான தலைமைத்துவம் என்பது வெறும் சாதனைகளில் மட்டும் இல்லை, சமூகத்திற்கு நாம் செய்யும் பங்களிப்பிலும் உள்ளது என்று நம்புகிறோம் என்றும் அவர் கூறினார்.</p>
