தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

26 May 2026, 9:20 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையா: எம்எல்ஏ பதவி ராஜினாமா ஏற்பு

சென்னை: அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏ இசக்கி சுப்பையா செவ்வா யன்று (மே 26) அன்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். கைப்பட கடிதம் எழுதுமாறு அறிவுறுத்திய நிலையில், இசக்கி சுப்பையா கைப்பட கடிதம் எழுதி மீண்டும் அறைக் குள் சென்று கடிதத்தை வழங்கினார். பின்னர் அவரது ராஜி னாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார். இந்நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதியும் காலியானது. இவர்களைத் தொடர்ந்து ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி, பழனி ரவி மனோகரன், திருத்தணி கோ.ஹரி ஆகி யோரும் தவெகவில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை அதிமுகவிலிருந்து நான்கு எம்எல்ஏக்கள் பதவி விலகியுள்ளனர்.

காலியான தொகுதியின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. 108 இடங்கள் வென்று ஆட்சி அமைத்த நிலையில், தமிழக அர சியல் களம் தொடர்ந்து பல்வேறு திருப்பங்களை சந்தித்து வருகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுகவில் இருந்து 47 எம்எல்ஏக்களில் எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் உள்பட 25 பேர் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்த 22 எம்எல்ஏக்கள் எதிராக வாக்களித்தனர். இதனால் அதிமுக இரு அணிகளாகப் பிரிந்தது. இந்நிலையில் தாரா புரம் எம்எல்ஏ சத்யபாமா, மதுராந்தகம் மரகதம் குமர வேல், பெருந்துறை ஜெயக்குமார் ஆகிய மூவரும் தங்க ளது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த தும் தவெகவில் இணைந்தனர். அவர்களது ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து மதுராந்தகம், பெருந்துறை, தாரா புரம் ஆகிய மூன்று தொகுதிகளும் காலியென தமிழ்நாடு அரசிதழில் செவ்வாய்க்கிழமை (மே 26) வெளியிடப்பட்டு உள்ளது. இந்த மூன்று தொகுதிகளுடன், முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு மற்றும் இசக்கி சுப்பையா ராஜினாமா செய்த அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகள் தமிழ்நாட்டில் காலியாக உள்ளன.

விவசாயிகளை ஏமாற்றியது தவெக அரசு: உதயநிதி கண்டனம்

சென்னை: தேர்தல் பிரச்சாரத்தின் போது 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி வழங்குவதாக வாக்குறுதி அளித்த தவெக அரசு, இப்போது ரூ.50 ஆயிரம் வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என அறிவித்திருப் பது மாபெரும் நம்பிக்கை மோசடி என எதிர்க்கட்சித் தலை வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் கண்ட னம் தெரிவித்துள்ளார். 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என முன்பே மக்களை ஏமாற்றிய அரசு, இப்போது பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் மீண்டும் ஏமாற்று வேலை செய்கிறது என்று அவர் குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர்

எடப்பாடி பழனிசாமி

யும் இது குறித்து கடுமையான விமர்சனம் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கை கையாள முடியாமல், குதிரை பேரம் என்னும் கேவலமான அரசியலை திசை திருப்பவே இந்த அறி விப்பை வெளியிட்டுள்ளனர் என்றும், விவசாயிகளை ஏமாற் றும் எந்த அரசும் நிலைத்ததாக சரித்திரமில்லை என்றும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நகராட்சி டெண்டர்கள் இனி ஆன்-லைனில் மட்டுமே!

சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் வாரியத்தின் டெண்டர் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இனி ஆன்லைனிலேயே நடைபெறும் என நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் கூடுதல் தலை மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி சுற்றறிக்கையில் உத்தரவிட்டுள்ளார். முன்வைப்பு தொகை மற்றும் பாதுகாப்பு தொகை ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்பட வேண்டும் என்றும், விண்ணப்பதாரர்களை தேவையின்றி நேரில் வர வழைக்கக் கூடாது என்றும், கட்டட அனுமதி விண்ணப் பங்கள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் வலியுறுத்தப் பட்டுள்ளது. டெண்டர் நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மை கட்டாயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.