பாழடைந்த நிலையில் ஏர்வாடி கிராம நிர்வாக அலுவலகம்
2 Jul 2026, 10:14 pm

பாழடைந்த நிலையில் ஏர்வாடி கிராம நிர்வாக அலுவலகம்

இராமநாதபுரம், ஜூலை 2- இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றி யத்திற்கு உட்பட்ட ஏர்வாடி கிராம நிர்வாக அலுவலகம் பல ஆண்டுகளாக பழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள போதும், அதனை சீரமைக்கவோ அல்லது புதிய கட்டிடம் அமைக்கவோ இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏர்வாடி கிராம நிர்வாக அலுவலகத் தைச் சுற்றியுள்ள பிச்சை மூப்பன்வலசை, ஏர்வாடி, ஏர்வாடி தர்கா, சின்ன ஏர்வாடி, ஏர்ந்துறை, கொத்தமகன்வாடி, நாச்சியம்மை புரம், மொட்டை கிழவன், வலச சடமுனி வலசை, மாரியம்மன் நகர், கல்பாறை உள் ளிட்ட 18 மேற்பட்ட கிராம மக்கள் வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதி சான்றி தழ் உள்ளிட்ட வருவாய் துறை சார்ந்து அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வ தற்காக கிராம நிர்வாக அலுவலகம் வருகின்ற னர். கட்டிடத்தின் சுவர்கள் விரிசல் அடைந்து, மரங்கள் வேர் ஊன்றி வளர்ந்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய அபாய நிலையில் உள்ளது. இதன் காரணமாக கிராம நிர்வாக அலுவல கம் தற்போது வாடகைக் கட்டிடத்தில் செயல் பட்டு வருகிறது. ஆனால் அந்த வாடகைக் கட்டிடத்தி லும் பொதுமக்களுக்கு தேவையான அடிப் படை வசதிகள் இல்லை. கழிப்பறை வசதி இல்லாமை, காத்திருக்கும் பொதுமக்க ளுக்கு இருக்கைகள் இல்லாமை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், தின மும் சான்றிதழ்கள், பட்டா, வருவாய் தொடர் பான பணிகளுக்காக வரும் பெண்கள், முதி யவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஏர்வாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல கிராம மக்களின் நீண்டகால கோரிக்கை யாக புதிய கிராம நிர்வாக அலுவலகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தாலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் அலட்சி யமான அணுகுமுறையால் அந்த கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பொதுமக் கள் குற்றம்சாட்டுகின்றனர். “பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டிய கிராம நிர்வாக அலுவலகமே இன்று குறைகளின் மையமாக மாறியுள்ளது” என்ற வேதனையை அப்பகுதி மக்கள் வெளிப்படுத்துகின்றனர். மக்கள் நலனை விட அலட்சியத்திற்கே முக்கியத்துவம் அளிக் கும் அதிகாரிகளின் செயல்பாடு ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் அவர்கள் கண்ட னம் தெரிவிக்கின்றனர். எனவே, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் உடனடியாக ஏர்வாடி கிராம நிர்வாக அலுவலகத்தை நேரில் ஆய்வு செய்து, பழுதடைந்த கட்டிடத்தை அகற்றி அனைத்து அடிப்படை வசதிகளுடனும் புதிய நிரந்தர கிராம நிர்வாக அலுவலகக் கட்டிடத்தை கட்டுவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கி விரைவாக பணிகளைத் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.