மூளைச்சாவு: இளைஞரின் உடலுறுப்புகள் தானம்
4 Nov 2026, 12:32 am
<p><strong>மூளைச்சாவு: இளைஞரின் உடலுறுப்புகள் தானம்</strong></p><p>ஈரோடு, நவ.3-உடற்பயிற்சி கூடத்தில் மயங்கி விழுந்ததில், மூளைச்சாவு ஏற்பட்ட பட்டதாரி இளைஞரின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.</p><p>ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள வரதநல்லூர், சின்னப்பெரிச்சிபாளையம், புதூரை சேர்ந்த ராஜுஎன்பவரின் மகன் நிர்மல்குமாா் (34). பொறியியல் பட்டதாரியான இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில், பயிற்சியின்போது மயங்கி விழுந்தார். ஈரோடு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சனியன்று மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து நிர்மல்குமாரின் உடலுறுப்புகளை தானமாக அளிக்க குடும்பத்தினர் முன்வந்தனா். இதில் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் இதயத்தின் முக்கிய உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.</p>
